• Apr 27 2026

குதிரையில் சென்று ஆன்லைன் டெலிவரி செய்த நபர்-வேடிக்கையான காணொளி இணையத்தில் வைரல்!

Ziya / Feb 25th 2026, 5:44 pm
image

https://www.facebook.com/share/v/1CJXEa2dHh/

ராஜஸ்தான் மாநிலத்தில் குதிரையில் சவாரி செய்து ஆன்லைன் ஆர்டர்களை விநியோகம் செய்யும் முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக  ஆன்லைன் ஆர்டர்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் பயணிப்பது  வழக்கமாகும்.

ஆனால், ராஜஸ்தானில் ஒருவர்  டெலிவரி பையை முதுகில் சுமந்து குதிரையில் சவாரி செய்து ஆர்டர்களை வழங்க செல்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த வைரல் வீடியோவில்,ராஜஸ்தானில் ஒரு சாலையின் ஓரத்தில் அந்த நபர் கறுப்பு நிற குதிரை ஒன்றில் சவாரி செய்வதைக் காணலாம். அந்த இடம் புறநகர்ப் பகுதியாகத் தெரிகிறது. ஒரு பக்கத்தில் பச்சை வயல்கள், தூரத்தில் சில சிதறிய கட்டடங்கள் மட்டும் இருக்கிறது. பாரம்பரிய உடை மற்றும் தலைப்பாகை அணிந்திருக்கும் அந்த நபர், கடிவாளத்தைப் பிடித்து குதிரை மீது அமர்ந்து செல்கிறார். பிரகாசமான மஞ்சள் நிற டெலிவரி பையை முதுகில் சுமந்துகொண்டு சவாரி செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வேடிக்கையாக பார்க்கப்படுகின்றது.

குதிரையில் சென்று ஆன்லைன் டெலிவரி செய்த நபர்-வேடிக்கையான காணொளி இணையத்தில் வைரல் https://www.facebook.com/share/v/1CJXEa2dHh/ராஜஸ்தான் மாநிலத்தில் குதிரையில் சவாரி செய்து ஆன்லைன் ஆர்டர்களை விநியோகம் செய்யும் முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பொதுவாக  ஆன்லைன் ஆர்டர்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களின் டெலிவரி பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் பயணிப்பது  வழக்கமாகும்.ஆனால், ராஜஸ்தானில் ஒருவர்  டெலிவரி பையை முதுகில் சுமந்து குதிரையில் சவாரி செய்து ஆர்டர்களை வழங்க செல்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.குறித்த வைரல் வீடியோவில்,ராஜஸ்தானில் ஒரு சாலையின் ஓரத்தில் அந்த நபர் கறுப்பு நிற குதிரை ஒன்றில் சவாரி செய்வதைக் காணலாம். அந்த இடம் புறநகர்ப் பகுதியாகத் தெரிகிறது. ஒரு பக்கத்தில் பச்சை வயல்கள், தூரத்தில் சில சிதறிய கட்டடங்கள் மட்டும் இருக்கிறது. பாரம்பரிய உடை மற்றும் தலைப்பாகை அணிந்திருக்கும் அந்த நபர், கடிவாளத்தைப் பிடித்து குதிரை மீது அமர்ந்து செல்கிறார். பிரகாசமான மஞ்சள் நிற டெலிவரி பையை முதுகில் சுமந்துகொண்டு சவாரி செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளது.இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வேடிக்கையாக பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement