• Nov 21 2025

வயலில் சடலமாக மீட்கப்பட்ட தவிசாளர்! மர்ம மரணம் குறித்து விசாரணை!

Chithra / Nov 21st 2025, 10:29 am
image

திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று காலை அவரது வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

​நேற்று மாலை தனது வயலுக்கு காவல் காப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற தவிசாளர்   நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால், அவரது குடும்பத்தினர் இன்று காலை வயலுக்குச் சென்று தேடியபோது, அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட பொலிஸார், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

​மரணத்தின் பின்னணி மற்றும் அது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த முழுமையான தகவல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​சடலமாக மீட்கப்பட்ட பிரகாத் தர்மசேன, அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி  கட்சியில் போட்டியிட்டு கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளராக அதிக வாக்குகளைப் பெற்றுத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


வயலில் சடலமாக மீட்கப்பட்ட தவிசாளர் மர்ம மரணம் குறித்து விசாரணை திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று காலை அவரது வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.​நேற்று மாலை தனது வயலுக்கு காவல் காப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற தவிசாளர்   நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால், அவரது குடும்பத்தினர் இன்று காலை வயலுக்குச் சென்று தேடியபோது, அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.சடலம் மீட்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட பொலிஸார், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.​மரணத்தின் பின்னணி மற்றும் அது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த முழுமையான தகவல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.​சடலமாக மீட்கப்பட்ட பிரகாத் தர்மசேன, அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி  கட்சியில் போட்டியிட்டு கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளராக அதிக வாக்குகளைப் பெற்றுத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement