• Aug 01 2025

வயலை உழுத வேளை கிடைத்த வைரக்கல் ; ஒரே நாளில் லட்சாதிபதியான பெண்!

shanuja / Jul 30th 2025, 3:26 pm
image

வயலில் உழுதுகொண்டிருந்த  வேளை நிலத்திலிருந்து வைரக்கல் ஒன்றை எடுத்த பெண், ஒரே நாளில் லட்சாதிபதியாகியுள்ளார். 


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்கலி அடுத்த ஜிகாவா சீந்தில் கொண்டா பகுதியில் இந்த அதிஷ்டம் நிகழ்ந்துள்ளது. 


 குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. மழை பெய்ததால் அப்பகுதியில் பலர் வயலை உழும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். 


அதுபோலவே அதே கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது மண்ணில் மின்னும் ஒரு பொருளைக் கண்டார். 


அதனை கையில் எடுத்து பார்த்த போது அந்தப் பொருள் வைரம் என தெரிய வந்தது. அதன்பின்னர் விவசாய நிலத்தில் பெண் ஒருவருக்கு வைரம் கிடைத்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. 


தகவலறிந்த  விவசாயிகள் போட்டி போட்டு வைரக்கல்லை வாங்குவதற்கு குறித்த பெண் வசிக்கும்  கிராமத்திற்கு சென்றனர். 


அப்போது அந்தப் பெண் விவசாயி என்னிடம் உள்ள வைரத்திற்கு  18 லட்சம் ரூபா விலையை நிர்ணயம் செய்கின்றேன் என்றார். 


ஆனால் வியாபாரிகள்  8 லட்சம் ரூபாவிற்கு வைரக்கல்லை வாங்க பேரம் பேசினர். பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற பின்னர்  சென்னம்பள்ளியை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர்  13 லட்சத்து 50000 ரூபாவைப் பெண்ணிடம் கொடுத்து வைரக்கல்லை வாங்கி சென்றார்.


இதனால் குறித்த விவசாயிப் பெண்  ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறியுள்ளார்.


கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜோனகிரி, எர்ரகுடி, உப்பர்லபள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை காலங்களில் விலை மதிப்புள்ள வைரங்கள் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வயலை உழுத வேளை கிடைத்த வைரக்கல் ; ஒரே நாளில் லட்சாதிபதியான பெண் வயலில் உழுதுகொண்டிருந்த  வேளை நிலத்திலிருந்து வைரக்கல் ஒன்றை எடுத்த பெண், ஒரே நாளில் லட்சாதிபதியாகியுள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்கலி அடுத்த ஜிகாவா சீந்தில் கொண்டா பகுதியில் இந்த அதிஷ்டம் நிகழ்ந்துள்ளது.  குறித்த பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. மழை பெய்ததால் அப்பகுதியில் பலர் வயலை உழும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். அதுபோலவே அதே கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது மண்ணில் மின்னும் ஒரு பொருளைக் கண்டார். அதனை கையில் எடுத்து பார்த்த போது அந்தப் பொருள் வைரம் என தெரிய வந்தது. அதன்பின்னர் விவசாய நிலத்தில் பெண் ஒருவருக்கு வைரம் கிடைத்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. தகவலறிந்த  விவசாயிகள் போட்டி போட்டு வைரக்கல்லை வாங்குவதற்கு குறித்த பெண் வசிக்கும்  கிராமத்திற்கு சென்றனர். அப்போது அந்தப் பெண் விவசாயி என்னிடம் உள்ள வைரத்திற்கு  18 லட்சம் ரூபா விலையை நிர்ணயம் செய்கின்றேன் என்றார். ஆனால் வியாபாரிகள்  8 லட்சம் ரூபாவிற்கு வைரக்கல்லை வாங்க பேரம் பேசினர். பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற பின்னர்  சென்னம்பள்ளியை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர்  13 லட்சத்து 50000 ரூபாவைப் பெண்ணிடம் கொடுத்து வைரக்கல்லை வாங்கி சென்றார்.இதனால் குறித்த விவசாயிப் பெண்  ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறியுள்ளார்.கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜோனகிரி, எர்ரகுடி, உப்பர்லபள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை காலங்களில் விலை மதிப்புள்ள வைரங்கள் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement