பொலிஸாரின் முச்சக்கரவண்டியில் பிடித்தவாறு பொதுமகன் ஒருவர் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில்,
பொலிஸாருக்குச் சொந்தமான முச்சக்கரவண்டி ஒன்று யாழ்ப்பாணத்திலுள்ள வீதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்தது.
அதன்போது அதேவீதியில் சைக்கிளில் பயணித்த பொதுமகன் ஒருவர் பொலிஸாரின் முச்சக்கரவண்டியைப் பிடித்தவாறு பொலிஸாருடன் சேர்ந்து பயணித்துள்ளார்.
பொதுமகன் ஒருவர் பொலிஸாரின் முச்சக்கரவண்டியைப் பிடித்தவாறு பயணிக்கும் போது பொலிஸாரும் அதனைத் தடுக்காது பொதுமகனுடன் இணைந்து பயணித்துள்ளனர்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றதுடன் காணொளியைப் பார்வையிட்ட பலரும் பல்வேறு வகையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகத்திற்கமைய மக்கள் பொலிஸார் மீது கொண்டுள்ள எண்ணங்களை மாற்றும் வகையில் இந்தக் காணொளி வைரலாகி வருகின்றது.
பொலிஸின் ஓட்டோவைப் பிடித்தவாறு சைக்கிளில் பயணித்த பொதுமகன் - “காவல்துறை உங்கள் நண்பன்” இணையத்தில் வைரலாகும் காணொளி பொலிஸாரின் முச்சக்கரவண்டியில் பிடித்தவாறு பொதுமகன் ஒருவர் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில், பொலிஸாருக்குச் சொந்தமான முச்சக்கரவண்டி ஒன்று யாழ்ப்பாணத்திலுள்ள வீதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்தது. அதன்போது அதேவீதியில் சைக்கிளில் பயணித்த பொதுமகன் ஒருவர் பொலிஸாரின் முச்சக்கரவண்டியைப் பிடித்தவாறு பொலிஸாருடன் சேர்ந்து பயணித்துள்ளார். பொதுமகன் ஒருவர் பொலிஸாரின் முச்சக்கரவண்டியைப் பிடித்தவாறு பயணிக்கும் போது பொலிஸாரும் அதனைத் தடுக்காது பொதுமகனுடன் இணைந்து பயணித்துள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றதுடன் காணொளியைப் பார்வையிட்ட பலரும் பல்வேறு வகையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகத்திற்கமைய மக்கள் பொலிஸார் மீது கொண்டுள்ள எண்ணங்களை மாற்றும் வகையில் இந்தக் காணொளி வைரலாகி வருகின்றது.