• Apr 16 2026

பிள்ளைகளை வகுப்புக்கு அனுப்பி வைக்க வீதியோரத்தில் நின்ற தாயை மோதிக் கொன்ற பேருந்து!

Chithra / Feb 20th 2026, 7:15 pm
image

 

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் எட்டியாந்தோட்டை, தணகொலவத்த பகுதியில் இன்று மாலை (20) பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 


நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இந்தியச் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 


குறித்த  பேருந்து மின் கம்பத்துடன் மோதி வீதியை விட்டு விலகி அங்கிருந்த வீடொன்றின் மீது கவிழ்ந்துள்ளது. 


இந்த விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் வீதியோரத்தில் நின்ற தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் குறித்த பேருந்துடன் மோதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 


தனது இரு பிள்ளைகளையும் மேலதிக வகுப்புக்கு அனுப்பி வைப்பதற்காக வீதியோரத்தில் காத்திருந்த 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார். 



மேலும், இவ்விபத்தில் காயமடைந்த சிறுவர்கள், பேருந்தில் பயணித்த இந்தியப் பிரஜைகள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


சம்பவம் தொடர்பாக எட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிள்ளைகளை வகுப்புக்கு அனுப்பி வைக்க வீதியோரத்தில் நின்ற தாயை மோதிக் கொன்ற பேருந்து  ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் எட்டியாந்தோட்டை, தணகொலவத்த பகுதியில் இன்று மாலை (20) பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இந்தியச் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த  பேருந்து மின் கம்பத்துடன் மோதி வீதியை விட்டு விலகி அங்கிருந்த வீடொன்றின் மீது கவிழ்ந்துள்ளது. இந்த விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் வீதியோரத்தில் நின்ற தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் குறித்த பேருந்துடன் மோதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தனது இரு பிள்ளைகளையும் மேலதிக வகுப்புக்கு அனுப்பி வைப்பதற்காக வீதியோரத்தில் காத்திருந்த 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த சிறுவர்கள், பேருந்தில் பயணித்த இந்தியப் பிரஜைகள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக எட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement