• May 23 2026

83 ஊழியர்களுக்கு 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை! 14வது நாளாக தொடரும் போராட்டம்

Chithra / Oct 27th 2025, 2:37 pm
image


திருகோணமலை புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என கோரி தொடர்ச்சியாக இன்றும் 14 ஆவது  நாளாகவும் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் பெரிதும் பொருளாதார ரீதியாக தங்களது குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 


இதுதொடர்பில் உரிய துறைசார் அமைச்சர், அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். 

தங்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுத்தரக் கோரி சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பல மில்லியன் டொலர்களை உருவாக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்காமல் மறுக்கப்படுவது ஏன்? ஜனாதிபதி அவர்களே இது உங்களின் கவனத்திற்கு போன்ற சூலோகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


83 ஊழியர்களுக்கு 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை 14வது நாளாக தொடரும் போராட்டம் திருகோணமலை புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என கோரி தொடர்ச்சியாக இன்றும் 14 ஆவது  நாளாகவும் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சுமார் 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் பெரிதும் பொருளாதார ரீதியாக தங்களது குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுதொடர்பில் உரிய துறைசார் அமைச்சர், அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுத்தரக் கோரி சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.பல மில்லியன் டொலர்களை உருவாக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்காமல் மறுக்கப்படுவது ஏன் ஜனாதிபதி அவர்களே இது உங்களின் கவனத்திற்கு போன்ற சூலோகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement