• May 23 2026

10 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

shanu / Oct 27th 2025, 2:23 pm
image

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


தர்மபுர  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் இன்றையதினம் 

அதிகாலை தர்மபுரம்  பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து சட்ட விரோத போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  


இதன்போது மோப்ப நாயை வைத்து பல வீடுகள் சோதனை செய்யப்பட்டது. அவ்வேளை  சட்டவிரோத கசிப்பு 40 லிற்றருடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 


அத்துடன் அதே பகுதியில் 05 ஐந்து கிராம் 50 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவரும் 05 ஐந்து கிராம் 100 மில்லி ஐஸ் போதை பொருளுடன் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 16,500 பணமும்  பொலிஸாரல் பறிமுதல்  செய்யப்பட்டது, 


குறித்த நடவடிக்கையின்  போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும்  கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

10 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தர்மபுர  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் இன்றையதினம் அதிகாலை தர்மபுரம்  பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து சட்ட விரோத போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  இதன்போது மோப்ப நாயை வைத்து பல வீடுகள் சோதனை செய்யப்பட்டது. அவ்வேளை  சட்டவிரோத கசிப்பு 40 லிற்றருடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அதே பகுதியில் 05 ஐந்து கிராம் 50 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவரும் 05 ஐந்து கிராம் 100 மில்லி ஐஸ் போதை பொருளுடன் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 16,500 பணமும்  பொலிஸாரல் பறிமுதல்  செய்யப்பட்டது, குறித்த நடவடிக்கையின்  போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும்  கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement