• Mar 10 2026

வான் பாய்ந்த 71 நீர்த்தேக்கங்கள் ;நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு!

Ziya / Dec 6th 2025, 4:20 pm
image

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்வதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 


திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார். 


அதேநேரம், மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. 


இதேவேளை மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (6) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.


வான் பாய்ந்த 71 நீர்த்தேக்கங்கள் ;நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்வதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார். அதேநேரம், மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (6) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement