பருத்தித்துறையில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் நால்வர் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து நேற்று கடற்றொழிலிற்கு 2 படகுகளில் 4 மீனவர்கள் சென்றனர்.
இன்று காலை வரை குறித்த மீனவர்கள் கரை திரும்பாத நிலையில் காலை முதல் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
நேற்று முதல் கடுமையான காற்று வீசி வருவதனால் படகுகள் விபத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என மீனவர்கள் அஞ்சுகின்றனர்.
சக மீனவர்கள் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடற்படையின் உதவி காலையிலிருந்து கோரப்பட்ட நிலையில் இதுவரை அவர்களின் உதவி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறை கடலில் 4 மீனவர்கள் மாயம் - தேடுதல் பணிகள் தீவிரம் பருத்தித்துறையில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் நால்வர் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து நேற்று கடற்றொழிலிற்கு 2 படகுகளில் 4 மீனவர்கள் சென்றனர். இன்று காலை வரை குறித்த மீனவர்கள் கரை திரும்பாத நிலையில் காலை முதல் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.நேற்று முதல் கடுமையான காற்று வீசி வருவதனால் படகுகள் விபத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என மீனவர்கள் அஞ்சுகின்றனர்.சக மீனவர்கள் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடற்படையின் உதவி காலையிலிருந்து கோரப்பட்ட நிலையில் இதுவரை அவர்களின் உதவி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.