• May 23 2026

பெங்களூருவில் 3 இலங்கை குற்றவாளிகள் கைது!

Chithra / Sep 30th 2025, 8:34 am
image


சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த மூன்று இலங்கையர்கள் பெங்களூரின் தேவனஹள்ளி அருகே உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இந்திய மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டதாகவும், பல மாதங்களாக நகரத்தில் தலைமறைவாக இருந்ததாகவும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களையே பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

விசாரணையில், மூவரும் 2024 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம்  வரை சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

அவர்களில் எவருக்கும் கடவுச்சீட்டு உட்பட செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து உதவிய நபரை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இந்திய மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் 13 கையடக்க தொலைபேசிகளையும் மீட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பெங்களூருவில் 3 இலங்கை குற்றவாளிகள் கைது சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த மூன்று இலங்கையர்கள் பெங்களூரின் தேவனஹள்ளி அருகே உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து இந்திய மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் இலங்கையில் குற்றங்களில் ஈடுபட்டதாகவும், பல மாதங்களாக நகரத்தில் தலைமறைவாக இருந்ததாகவும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களையே பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.விசாரணையில், மூவரும் 2024 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம்  வரை சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.அவர்களில் எவருக்கும் கடவுச்சீட்டு உட்பட செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.பெங்களூருவில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து உதவிய நபரை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இந்திய மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் 13 கையடக்க தொலைபேசிகளையும் மீட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement