கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் பல்வேறு வகையான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக 2,712 சிறுவர்கள் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
அதிகபட்சமாக இதய அறுவைச் சிகிச்சைகளுக்காகவே சிறுவர்கள் காத்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன் வகைப்படுத்தப்பட்ட விபரங்கள் வருமாறு:
இதய அறுவைச் சிகிச்சை: 1,025 சிறுவர்கள்
விசேட அறுவைச் சிகிச்சை: 593 சிறுவர்கள்
கண் அறுவைச் சிகிச்சை: 388 சிறுவர்கள்
காது, மூக்கு, தொண்டை: 266 சிறுவர்கள்
பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை: 240 சிறுவர்கள்
முதுகெலும்பு அறுவைச் சிகிச்சை: 133 சிறுவர்கள்
எலும்பு முறிவு: 48 சிறுவர்கள்
நரம்பியல் அறுவைச் சிகிச்சை: 19 சிறுவர்கள்
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த அறுவைச் சிகிச்சைகளின் விபரங்களையும் அமைச்சர் சமர்ப்பித்தார்.
கடந்த ஆண்டில் (2025) மாத்திரம் 18,600 அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 2020 இல் 14,035 அறுவை சிகிச்சைகளும், அதனைத் தொடர்ந்து 2021 இல் 11,484 அறுவை சிகிச்சைகளும், 2022 இல் 15,039 அறுவை சிகிச்சைகளும், 2023 இல் 17,905 அறுவை சிகிச்சைகளும், 2024 இல் 17,692 அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, 2022 ஆம் ஆண்டு முதல் பெரிய அளவிலான இதய அறுவைச் சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி கடந்த ஆண்டில் 2,122 இதய அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 2023 இல் 2,116, 2024 இல் 1,637 ஆகும்.
வைத்தியசாலையின் சேவைகளை விரிவாக்குவதற்கும், வெற்றிடமாக உள்ள பணியாளர் குழாமினை அதிகரிப்பதற்கும் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 2,712 சிறுவர்கள் - வெளியான தகவல் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் பல்வேறு வகையான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக 2,712 சிறுவர்கள் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.அதிகபட்சமாக இதய அறுவைச் சிகிச்சைகளுக்காகவே சிறுவர்கள் காத்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.அதன் வகைப்படுத்தப்பட்ட விபரங்கள் வருமாறு:இதய அறுவைச் சிகிச்சை: 1,025 சிறுவர்கள்விசேட அறுவைச் சிகிச்சை: 593 சிறுவர்கள்கண் அறுவைச் சிகிச்சை: 388 சிறுவர்கள்காது, மூக்கு, தொண்டை: 266 சிறுவர்கள்பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை: 240 சிறுவர்கள்முதுகெலும்பு அறுவைச் சிகிச்சை: 133 சிறுவர்கள்எலும்பு முறிவு: 48 சிறுவர்கள்நரம்பியல் அறுவைச் சிகிச்சை: 19 சிறுவர்கள்கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த அறுவைச் சிகிச்சைகளின் விபரங்களையும் அமைச்சர் சமர்ப்பித்தார்.கடந்த ஆண்டில் (2025) மாத்திரம் 18,600 அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதன்படி, 2020 இல் 14,035 அறுவை சிகிச்சைகளும், அதனைத் தொடர்ந்து 2021 இல் 11,484 அறுவை சிகிச்சைகளும், 2022 இல் 15,039 அறுவை சிகிச்சைகளும், 2023 இல் 17,905 அறுவை சிகிச்சைகளும், 2024 இல் 17,692 அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.குறிப்பாக, 2022 ஆம் ஆண்டு முதல் பெரிய அளவிலான இதய அறுவைச் சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி கடந்த ஆண்டில் 2,122 இதய அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 2023 இல் 2,116, 2024 இல் 1,637 ஆகும்.வைத்தியசாலையின் சேவைகளை விரிவாக்குவதற்கும், வெற்றிடமாக உள்ள பணியாளர் குழாமினை அதிகரிப்பதற்கும் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.