• May 05 2026

சந்நிதியான் ஆச்சிரமம் வன்னிப் பகுதிகளுக்கு 255,000 ரூபா நிதி உதவிகள்!

Ziya / May 4th 2026, 3:16 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வன்னியின் பல்வேறு பகுதிகளில்  கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் அமைந்துள்ள 10 மாணவர்கள் கல்வி கற்கின்ற சுரபி முன்பள்ளியின் கோரிக்கைக்கு அமைவாக, 25,000 ரூபா நிதியில்  கற்றல் உபகாரணங்களும்,  கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள குரு கணினி மையத்தின் கோரிக்கைக்கு அமைவாக,இளம்பிள்ளைவாதம் (போலியோ) நோயால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றின் சுய தொழிலாக மேற்கொள்ளும் கணினி மையத்தின் நிழற்பிரதி இயந்திரம் திருத்துவதற்காக 80,000 ரூபா நிதியும், முல்லைத்தீவு ஐயன்கன்குளம், புத்துவெட்டுவான் பகுதியில் அமைந்துள்ள ஐயன்கன்குளம் பிள்ளையார் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக காட்டுமான பணிக்காக 150,000 ரூபா நிதியும் வழங்கிவைக்கப்பட்டதுடன் முல்லைத்தீவு மாவட்டம் மாமடு, நெடுங்கேணி கற்பகா அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளும்  வழங்கப்பட்டது.


உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள்  தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்

சந்நிதியான் ஆச்சிரமம் வன்னிப் பகுதிகளுக்கு 255,000 ரூபா நிதி உதவிகள் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வன்னியின் பல்வேறு பகுதிகளில்  கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் அமைந்துள்ள 10 மாணவர்கள் கல்வி கற்கின்ற சுரபி முன்பள்ளியின் கோரிக்கைக்கு அமைவாக, 25,000 ரூபா நிதியில்  கற்றல் உபகாரணங்களும்,  கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள குரு கணினி மையத்தின் கோரிக்கைக்கு அமைவாக,இளம்பிள்ளைவாதம் (போலியோ) நோயால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றின் சுய தொழிலாக மேற்கொள்ளும் கணினி மையத்தின் நிழற்பிரதி இயந்திரம் திருத்துவதற்காக 80,000 ரூபா நிதியும், முல்லைத்தீவு ஐயன்கன்குளம், புத்துவெட்டுவான் பகுதியில் அமைந்துள்ள ஐயன்கன்குளம் பிள்ளையார் ஆலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக காட்டுமான பணிக்காக 150,000 ரூபா நிதியும் வழங்கிவைக்கப்பட்டதுடன் முல்லைத்தீவு மாவட்டம் மாமடு, நெடுங்கேணி கற்பகா அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளும்  வழங்கப்பட்டது.உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள்  தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்

Advertisement

Advertisement

Advertisement