• Apr 15 2026

இலங்கையில் இருந்த 240 ஈரான் கடற்படை மாலுமிகள் நாடு திரும்பினர்!

Chithra / Apr 15th 2026, 8:13 am
image

இலங்கையின் பாதுகாப்பில் இருந்துவந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள், நேற்று விசேட விமானம் மூலம் மீண்டும் ஈரான் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் 'IRIS Dena' கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலில் இருந்த 204 மாலுமிகளுமே இவ்வாறு பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

மாலுமிகள் குழுவினர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட துருக்கி விமானம் (Turkish Airlines) மூலம் ஈரான் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இலங்கையின் பாதுகாப்பில் இருந்த இவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர இணக்கப்பாட்டின் அடிப்படையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றித் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இலங்கையில் இருந்த 240 ஈரான் கடற்படை மாலுமிகள் நாடு திரும்பினர் இலங்கையின் பாதுகாப்பில் இருந்துவந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள், நேற்று விசேட விமானம் மூலம் மீண்டும் ஈரான் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் 'IRIS Dena' கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலில் இருந்த 204 மாலுமிகளுமே இவ்வாறு பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இத்தகவலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.மாலுமிகள் குழுவினர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட துருக்கி விமானம் (Turkish Airlines) மூலம் ஈரான் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த சில நாட்களாக இலங்கையின் பாதுகாப்பில் இருந்த இவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர இணக்கப்பாட்டின் அடிப்படையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றித் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement