• Apr 21 2026

குச்சவெளியில் 150 குடும்பங்களுக்கு 16 வகையான சுகாதாரப் பொருட்கள் வழங்கி வைப்பு!

Ziya / Mar 19th 2026, 3:41 pm
image

குச்சவெளி பிரதேசத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு 16 வகையான சுகாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


UK Aid மற்றும் Australian Aid ஆகியவற்றின் நிதி அனுசரணையுடன், UNOPS மற்றும் விரித்தி வலையமைப்பு இணைந்து, அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) நிறுவனம், குச்சவெளி பிரதேச செயலகத்தின் அனுமதி மற்றும் நெறிப்படுத்தலுடன்,   (18) குச்சவெளி பிரதேசத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு 16 வகையான சுகாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வு, உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது.


எதிர்வரும் வாரங்களில், மூதூர் மற்றும் வெருகல் பிரதேசங்களில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சுகாதாரப் பொதிகள் வழங்கப்படவுள்ளது. 


மூன்று பிரதேச செயலகங்களிலும் மொத்தமாக 400 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில், AHRC நிறுவனத்தின் பணிப்பாளர் க. லவகுசராசா, பிரதி பணிப்பாளர்  அ. மதன், கணக்காளர்  கு. சஞ்சலிதா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 


மேலும், UNOPS நிறுவனத்தின் பிரதிநிதி திருமதி நிரோசிமா அவர்களும் கலந்து சிறப்பித்தார்.


குச்சவெளியில் 150 குடும்பங்களுக்கு 16 வகையான சுகாதாரப் பொருட்கள் வழங்கி வைப்பு குச்சவெளி பிரதேசத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு 16 வகையான சுகாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.UK Aid மற்றும் Australian Aid ஆகியவற்றின் நிதி அனுசரணையுடன், UNOPS மற்றும் விரித்தி வலையமைப்பு இணைந்து, அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) நிறுவனம், குச்சவெளி பிரதேச செயலகத்தின் அனுமதி மற்றும் நெறிப்படுத்தலுடன்,   (18) குச்சவெளி பிரதேசத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு 16 வகையான சுகாதாரப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வு, உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது.எதிர்வரும் வாரங்களில், மூதூர் மற்றும் வெருகல் பிரதேசங்களில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சுகாதாரப் பொதிகள் வழங்கப்படவுள்ளது. மூன்று பிரதேச செயலகங்களிலும் மொத்தமாக 400 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில், AHRC நிறுவனத்தின் பணிப்பாளர் க. லவகுசராசா, பிரதி பணிப்பாளர்  அ. மதன், கணக்காளர்  கு. சஞ்சலிதா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், UNOPS நிறுவனத்தின் பிரதிநிதி திருமதி நிரோசிமா அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

Advertisement

Advertisement

Advertisement