• Apr 20 2026

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் 10,000 கோடி ரூபாய் நட்டம்: சானக அம்பலம்

Chithra / Feb 20th 2026, 8:11 pm
image

 

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நட்டம் 10,000 கோடி ரூபாய் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க  தெரிவித்தார்.

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தரம் குறைந்த நிலக்கரிகேள்விப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்குப் போதுமான ஏற்பாடுகள் இருந்தபோதிலும், அதனை இரத்து செய்யாமை பாரதூரமான விடயமாகும்.

ஒப்பந்தத்தின்படி இரண்டு நிலக்கரி கப்பல்கள் வராவிட்டால் அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஒரு கப்பலும், ஜனவரியில் நான்கு கப்பல்களும் மட்டுமே வந்துள்ளன.

பெப்ரவரி மாதத்தில் இதுவரை நான்கு கப்பல்களே வந்துள்ளன. மொத்தம் 15 கப்பல்கள் வந்திருக்க வேண்டிய நிலையில் இதுவரை 8 கப்பல்களே வந்துள்ளன. இந்தக் கப்பல் தாமதத்தினால் மட்டும் நாட்டிற்கு 31 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

தரம் குறைந்த நிலக்கரி டெண்டர் காரணமாக இதுவரை 7,500 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், இது 10,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த 10,000 கோடி ரூபாய் நட்டத்தை ஈடுகட்டவே மின்சாரக் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. அந்த 10 வீத அதிகரிப்பு என்பது சரியாக 10,000 கோடி ரூபாவாகும் என டி.வி. சானக்க மேலும் தெரிவித்தார்.

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் 10,000 கோடி ரூபாய் நட்டம்: சானக அம்பலம்  தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நட்டம் 10,000 கோடி ரூபாய் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க  தெரிவித்தார்.தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.தரம் குறைந்த நிலக்கரிகேள்விப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்குப் போதுமான ஏற்பாடுகள் இருந்தபோதிலும், அதனை இரத்து செய்யாமை பாரதூரமான விடயமாகும்.ஒப்பந்தத்தின்படி இரண்டு நிலக்கரி கப்பல்கள் வராவிட்டால் அந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஒரு கப்பலும், ஜனவரியில் நான்கு கப்பல்களும் மட்டுமே வந்துள்ளன.பெப்ரவரி மாதத்தில் இதுவரை நான்கு கப்பல்களே வந்துள்ளன. மொத்தம் 15 கப்பல்கள் வந்திருக்க வேண்டிய நிலையில் இதுவரை 8 கப்பல்களே வந்துள்ளன. இந்தக் கப்பல் தாமதத்தினால் மட்டும் நாட்டிற்கு 31 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.தரம் குறைந்த நிலக்கரி டெண்டர் காரணமாக இதுவரை 7,500 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், இது 10,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.இந்த 10,000 கோடி ரூபாய் நட்டத்தை ஈடுகட்டவே மின்சாரக் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. அந்த 10 வீத அதிகரிப்பு என்பது சரியாக 10,000 கோடி ரூபாவாகும் என டி.வி. சானக்க மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement