• Jul 19 2025

100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்! அமைச்சர் பிமல்

Chithra / Jul 18th 2025, 2:54 pm
image


தெஹிவளை ரயில் நிலையத்தின் புதுப்பித்தல் இரண்டு மாதங்களில் தொடங்கப்படும் என  துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

தெஹிவளை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பின்மைக்கு தீர்வாக, அதைச் சுற்றியுள்ள மதிலை விரிவுபடுத்துதல், ரயில் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரயில் மூலம் பொருட்களை கொண்டு செல்வதை எளிதாக்குதல், 

மாற்றுத்திறனாளிகள் ரயில் பயணிகளுக்கு வசதிகளை வழங்குதல் மற்றும் அடையாளம் காணப்பட்ட பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

தெஹிவளை ரயில் நிலையத்தின் குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கண்காணிப்பு விஜயத்திால் (17) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும்அனுமதியின் பேரில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த விசேட கண்காணிப்பு விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டது.

100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் அமைச்சர் பிமல் தெஹிவளை ரயில் நிலையத்தின் புதுப்பித்தல் இரண்டு மாதங்களில் தொடங்கப்படும் என  துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.தெஹிவளை ரயில் நிலையத்தில் தற்போதுள்ள பாதுகாப்பின்மைக்கு தீர்வாக, அதைச் சுற்றியுள்ள மதிலை விரிவுபடுத்துதல், ரயில் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரயில் மூலம் பொருட்களை கொண்டு செல்வதை எளிதாக்குதல், மாற்றுத்திறனாளிகள் ரயில் பயணிகளுக்கு வசதிகளை வழங்குதல் மற்றும் அடையாளம் காணப்பட்ட பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.தெஹிவளை ரயில் நிலையத்தின் குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கண்காணிப்பு விஜயத்திால் (17) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும்அனுமதியின் பேரில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்த விசேட கண்காணிப்பு விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement