இரத்தினபுரி – பெல்மதுளை, லெல்லுபிட்டிய தோட்டத்தின் பெரண்டுவ பகுதியில் பாரிய அரச மரக்கிளை ஒன்று முறிந்து லயன் குடியிருப்பின் மீது விழுந்ததில் 06 லயன் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
30 அறைகளைக் கொண்ட குறித்த லயன் குடியிருப்பின் மீது பாரிய அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததையடுத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது குறித்த குடியிருப்பில் வசித்து வந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (29) நேரில் சென்று சந்தித்து, அவர்களின் நிலைமைகள் மற்றும் தற்போதைய தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.
இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குடியிருப்பு நிலைமைகள் மற்றும் அவசர தேவைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மரக்கிளை முறிந்து விழுந்ததில் 06 லயன் அறைகள் சேதம் – பெல்மதுளையில் அனர்த்தம் இரத்தினபுரி – பெல்மதுளை, லெல்லுபிட்டிய தோட்டத்தின் பெரண்டுவ பகுதியில் பாரிய அரச மரக்கிளை ஒன்று முறிந்து லயன் குடியிருப்பின் மீது விழுந்ததில் 06 லயன் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.30 அறைகளைக் கொண்ட குறித்த லயன் குடியிருப்பின் மீது பாரிய அரச மரத்தின் கிளை முறிந்து விழுந்ததையடுத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தின்போது குறித்த குடியிருப்பில் வசித்து வந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (29) நேரில் சென்று சந்தித்து, அவர்களின் நிலைமைகள் மற்றும் தற்போதைய தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குடியிருப்பு நிலைமைகள் மற்றும் அவசர தேவைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.