• Nov 11 2026

மட்டக்களப்பில் கோர மோட்டார் சைக்கிள் விபத்து-குடும்பஸ்தர் பலி !

Ziya / Nov 11th 2026, 2:45 pm
image

மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேசத்தின் 14ஆம் கிராமமான கணேசபுரம் விலினையடிச் சந்தியில் இன்று (நவம்பர் 10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.


இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் மண்டூர் 2ஆம் குறிச்சியைச் சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சாம்பசிவம் சதானந்தம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த கணேசபுரத்தைச் சேர்ந்த நபர் காயமடைந்த நிலையில், மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை போரதீவுப்பற்று பிரதேச சபையின் அமரர் ஊர்தி மூலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பில் கோர மோட்டார் சைக்கிள் விபத்து-குடும்பஸ்தர் பலி மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேசத்தின் 14ஆம் கிராமமான கணேசபுரம் விலினையடிச் சந்தியில் இன்று (நவம்பர் 10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் மண்டூர் 2ஆம் குறிச்சியைச் சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சாம்பசிவம் சதானந்தம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த கணேசபுரத்தைச் சேர்ந்த நபர் காயமடைந்த நிலையில், மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை போரதீவுப்பற்று பிரதேச சபையின் அமரர் ஊர்தி மூலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement