• Aug 18 2025

முத்தையன்கட்டில் இளைஞர் உயிரிழப்பு - பலர் அரசியல் லாபம் ஈட்ட முயற்சி! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

shanuja / Aug 18th 2025, 11:26 am
image

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களை திரிபுபடுத்தி  அரசியல் லாபம் பெற முயற்சிப்பதாகவும், இதனை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


முத்தையன்கட்டில் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் 3 இராணுவ படையினர் கைது செய்யப்பட்டனர்.


கைதானவர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலிலர் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்தநிலையில், இந்த சம்பவத்தை திரிபுபடுத்தி தவறான தகவல்களை வழங்கி, சில அரசியல் குழுக்கள் வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.


இந்த சம்பவத்தை அவர்கள், இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என காண்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


சிலர் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு தவறான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


இதனிடையே, இராணுவ முகாமில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் தொடர்பான பீ அறிக்கையையும் ஒட்டுச்சுட்டான் பொலிசார் தயாரித்துள்ளனர்.


சந்தேகநபர்களுக்கு தற்போது, அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் விரைவில் மன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர்.


இந்தநிலையில், கடந்த கால சம்பவங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த சம்பவத்தை அதனுடன் தொடர்புபடுத்தி மக்களை குழப்புவதற்கு, சில குழுக்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றது. இது கண்டிக்கத்தக்க விடயம்


இதனிடையே, உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு எந்தவித பாரிய காயங்கம் நேரடியாக பங்களிக்கவில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேற்கொண்ட அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது 


அவரது உடற்கூட்டு எச்சங்கள் பகுப்பாய்வுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.எனவே, வடக்கு கிழக்கில் உள்ள பொதுமக்கள் இந்த விடயத்தை நன்கு புரிந்துக் கொண்டு எந்தவித தூண்டுதல்களும் உட்படாது நாட்டின் அமைதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்த விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, முத்தையன்கட்டு முகாமிற்குள், நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாகவும், இராணுவ முகாமுக்குள் நுழைந்து திருட முயன்றமை தொடர்பில், அவருக்கு எதிராக ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


அவ்வாறான பின்னணியிலேயே அவர் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டார்.எனினும், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கும் இராணுவத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்ட நபரே இராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், உயிரிழந்ததாக கூறப்படும் நபரை அவர் தாக்கியிருக்கவில்லை.


எனவே, பொலிசார் முன்னெடுக்கும் சகல விசாரணைகளுக்;கும் பக்கசார்பின்றி இராணுவம் ஆதரவளிக்கும்.


இதேவேளை, முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்;த விவகாரம் தொடர்பில் ஒட்டுச்சுட்டான் பொலிசாரால் இரண்டு விசாரணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.


13 இராணுவ சிப்பாய்கள் உட்பட மேலும் பலரிடம் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பில், முகாமுக்குள் திருட வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் 2 இராணுவ சிப்பாய்களும், மற்றையவர் தாக்குதல் தொடர்பிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொதுமக்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில்; மற்றைய சிப்பாய் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.அவர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

முத்தையன்கட்டில் இளைஞர் உயிரிழப்பு - பலர் அரசியல் லாபம் ஈட்ட முயற்சி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களை திரிபுபடுத்தி  அரசியல் லாபம் பெற முயற்சிப்பதாகவும், இதனை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.முத்தையன்கட்டில் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் 3 இராணுவ படையினர் கைது செய்யப்பட்டனர்.கைதானவர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலிலர் வைக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், இந்த சம்பவத்தை திரிபுபடுத்தி தவறான தகவல்களை வழங்கி, சில அரசியல் குழுக்கள் வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.இந்த சம்பவத்தை அவர்கள், இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என காண்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.சிலர் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு தவறான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர்.இந்த சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதனிடையே, இராணுவ முகாமில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் தொடர்பான பீ அறிக்கையையும் ஒட்டுச்சுட்டான் பொலிசார் தயாரித்துள்ளனர்.சந்தேகநபர்களுக்கு தற்போது, அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் விரைவில் மன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர்.இந்தநிலையில், கடந்த கால சம்பவங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த சம்பவத்தை அதனுடன் தொடர்புபடுத்தி மக்களை குழப்புவதற்கு, சில குழுக்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றது. இது கண்டிக்கத்தக்க விடயம்இதனிடையே, உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு எந்தவித பாரிய காயங்கம் நேரடியாக பங்களிக்கவில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேற்கொண்ட அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது அவரது உடற்கூட்டு எச்சங்கள் பகுப்பாய்வுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.எனவே, வடக்கு கிழக்கில் உள்ள பொதுமக்கள் இந்த விடயத்தை நன்கு புரிந்துக் கொண்டு எந்தவித தூண்டுதல்களும் உட்படாது நாட்டின் அமைதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, முத்தையன்கட்டு முகாமிற்குள், நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.முன்னதாகவும், இராணுவ முகாமுக்குள் நுழைந்து திருட முயன்றமை தொடர்பில், அவருக்கு எதிராக ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அவ்வாறான பின்னணியிலேயே அவர் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டார்.எனினும், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கும் இராணுவத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்ட நபரே இராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், உயிரிழந்ததாக கூறப்படும் நபரை அவர் தாக்கியிருக்கவில்லை.எனவே, பொலிசார் முன்னெடுக்கும் சகல விசாரணைகளுக்;கும் பக்கசார்பின்றி இராணுவம் ஆதரவளிக்கும்.இதேவேளை, முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்;த விவகாரம் தொடர்பில் ஒட்டுச்சுட்டான் பொலிசாரால் இரண்டு விசாரணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.13 இராணுவ சிப்பாய்கள் உட்பட மேலும் பலரிடம் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில், முகாமுக்குள் திருட வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் 2 இராணுவ சிப்பாய்களும், மற்றையவர் தாக்குதல் தொடர்பிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுமக்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில்; மற்றைய சிப்பாய் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.அவர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement