• Jun 03 2026

தம்பி தாக்கி அண்ணன் பலி; கணவன் கையில் மனைவி பலி - இலங்கையில் அரங்கேறும் கொடூரம்

Chithra / Jun 2nd 2026, 10:33 am
image

அம்பாந்தோட்டை மாவட்டம், வலஸ்முல்லைப் பிரதேசத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட காணித் தகராறு காரணமாக, அண்ணனைத் தம்பியே அடித்துப் படுகொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.


இந்தக் கொடூர சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


மேற்படி இரு சகோதரர்களுக்கும் இடையே நீண்டகாலமாகக் காணித் தகராறு நிலவி வந்துள்ளது. நேற்று மாலையும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது.


இதன்போது ஆத்திரமடைந்த தம்பி, அண்ணன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இந்தக் கொலைச் ஸம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய தம்பியைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவியைக் கணவரே கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது.


இரண்டு பிள்ளைகளின் தாயாரான 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.


படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்டகாலமாகக் குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது. நேற்றும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியுள்ளதுடன், இதன்போது ஆத்திரமடைந்த கணவர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியைக் சரமாரியாகக் குத்தியுள்ளார்.


இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான கணவரைத் திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


தம்பி தாக்கி அண்ணன் பலி; கணவன் கையில் மனைவி பலி - இலங்கையில் அரங்கேறும் கொடூரம் அம்பாந்தோட்டை மாவட்டம், வலஸ்முல்லைப் பிரதேசத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட காணித் தகராறு காரணமாக, அண்ணனைத் தம்பியே அடித்துப் படுகொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.இந்தக் கொடூர சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மேற்படி இரு சகோதரர்களுக்கும் இடையே நீண்டகாலமாகக் காணித் தகராறு நிலவி வந்துள்ளது. நேற்று மாலையும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது.இதன்போது ஆத்திரமடைந்த தம்பி, அண்ணன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்தக் கொலைச் ஸம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய தம்பியைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவியைக் கணவரே கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது.இரண்டு பிள்ளைகளின் தாயாரான 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்டகாலமாகக் குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது. நேற்றும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியுள்ளதுடன், இதன்போது ஆத்திரமடைந்த கணவர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியைக் சரமாரியாகக் குத்தியுள்ளார்.இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான கணவரைத் திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement