• May 06 2025

தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் திடீர் உயிரிழப்பு!

Chithra / May 6th 2025, 11:13 am
image

   

  

கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற கண்ணொருவ தாவர மரபணு வள மையத்தின் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கலகெதர மினிகமுவவில் வசிக்கும் 33 வயதுடைய கிருஷாந்தி குமாரி தசநாயக்க (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திடீரென உடல்நிலையில் எற்பட்ட சுகவீனம்  காரணமாக, சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் திடீர் உயிரிழப்பு      கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற கண்ணொருவ தாவர மரபணு வள மையத்தின் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கலகெதர மினிகமுவவில் வசிக்கும் 33 வயதுடைய கிருஷாந்தி குமாரி தசநாயக்க (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.திடீரென உடல்நிலையில் எற்பட்ட சுகவீனம்  காரணமாக, சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement