• May 23 2026

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இளம் பிக்கு உயிரிழப்பு!

Chithra / Oct 7th 2025, 1:43 pm
image


இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக விடுதியின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த இளம் பிக்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த 24 வயதுடைய இளம் பிக்கு ஆவார்.

செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அதிகாலை 02.30 மணியளவில் பல்கலைக்கழக விடுதியின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த இளம் பிக்கு,  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஹோமாகம தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இளம் பிக்கு உயிரிழப்பு இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக விடுதியின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த இளம் பிக்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த 24 வயதுடைய இளம் பிக்கு ஆவார்.செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அதிகாலை 02.30 மணியளவில் பல்கலைக்கழக விடுதியின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த இளம் பிக்கு,  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் ஹோமாகம தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement