• Sep 14 2026

செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம்! – அமைச்சர் வெளியிட்ட தகவல்

Chithra / Sep 14th 2026, 3:08 pm
image


உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையின் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.


எரிபொருள் விநியோக நிறுவனங்களில் நிலவும் தட்டுப்பாடு தொடர்பில் இன்று (14) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.


சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், இலங்கையின் உள்ளூர் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து செயற்படுவது சவாலானது என சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, எதிர்காலத்தில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை சமாளிப்பதற்கு பல்வேறு தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


கடந்த காலங்களைப் போன்று அரசாங்கம் தலையிட்டு எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது எரிபொருள் விலை தொடர்பில் மாற்றுத் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ள போதிலும், நுகர்வோரின் நலனையும் கருத்திற்கொண்டே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


ஒவ்வொரு மாத இறுதியிலும் மேற்கொள்ளப்படும் கனிய எண்ணெய் விலைத் திருத்த நடைமுறைக்கு அமைய, தற்போதைய சர்வதேச சூழ்நிலை மற்றும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் – அமைச்சர் வெளியிட்ட தகவல் உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையின் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.எரிபொருள் விநியோக நிறுவனங்களில் நிலவும் தட்டுப்பாடு தொடர்பில் இன்று (14) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், இலங்கையின் உள்ளூர் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து செயற்படுவது சவாலானது என சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, எதிர்காலத்தில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை சமாளிப்பதற்கு பல்வேறு தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.கடந்த காலங்களைப் போன்று அரசாங்கம் தலையிட்டு எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது எரிபொருள் விலை தொடர்பில் மாற்றுத் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ள போதிலும், நுகர்வோரின் நலனையும் கருத்திற்கொண்டே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.ஒவ்வொரு மாத இறுதியிலும் மேற்கொள்ளப்படும் கனிய எண்ணெய் விலைத் திருத்த நடைமுறைக்கு அமைய, தற்போதைய சர்வதேச சூழ்நிலை மற்றும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement