• Jun 13 2026

நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் படுகாயம்!

Chithra / Jun 9th 2026, 10:16 pm
image

வவுனியா, மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர்.


இச் சம்பவம் தொடர்பில பொலிசார் மேலும் தெரிவிக்கையில்,


வவுனியா - மன்னார் வீதியில் நெளுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள், வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது வவுனியாவில் இருந்து நெளுக்குளம் நோக்கிச் சென்ற கார் ஒன்றும் பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட நிலையில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.


விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.  

நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் படுகாயம் வவுனியா, மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர்.இச் சம்பவம் தொடர்பில பொலிசார் மேலும் தெரிவிக்கையில்,வவுனியா - மன்னார் வீதியில் நெளுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள், வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது வவுனியாவில் இருந்து நெளுக்குளம் நோக்கிச் சென்ற கார் ஒன்றும் பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட நிலையில் இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement