மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நிர்மாணப் பணியின்போது தூண் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (29) பிற்பகல் காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
வீட்டு நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது தூண் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், அதில் சிக்கிய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காத்தான்குடி பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
காத்தான்குடியில் நிர்மாணப் பணியின்போது தூண் இடிந்து விழுந்து இளைஞர் பலி மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நிர்மாணப் பணியின்போது தூண் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (29) பிற்பகல் காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.வீட்டு நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது தூண் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், அதில் சிக்கிய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர் மட்டக்களப்பு ஜெயந்திபுரம், யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காத்தான்குடி பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.