• Apr 15 2026

இராஜகிரியவில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்! பிரபல நடிகையின் மகனுக்கும் தொடர்பு

Chithra / Feb 10th 2026, 11:15 am
image


இளைஞர் ஒருவர் தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவரும் நிலையில் வெலிக்கடை பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் இளைஞர் ஒருவர் மண்வெட்டியால் மற்றொரு இளைஞரை தாக்கும் காணொளிகள் வெளியாகியுள்ளது.


எனினும் இந்த சம்பவம் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதென பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம் நேற்று சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, தாக்கப்பட்ட இளைஞர் வெலிக்கடை பொலிஸாரை அணுகி முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தாக்குதல் நடந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


இது தொடர்பாக, இளைஞர்களில் ஒருவரை வெலிக்கடை  பொலிஸார்  கைது செய்துள்ளனர்.மேலும் சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


தாக்குதல் நடந்த நேரத்தில் பிரபல நடிகையின் மகனும் சம்பவ இடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

இராஜகிரியவில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன் பிரபல நடிகையின் மகனுக்கும் தொடர்பு இளைஞர் ஒருவர் தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவரும் நிலையில் வெலிக்கடை பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் இளைஞர் ஒருவர் மண்வெட்டியால் மற்றொரு இளைஞரை தாக்கும் காணொளிகள் வெளியாகியுள்ளது.எனினும் இந்த சம்பவம் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதென பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் நேற்று சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, தாக்கப்பட்ட இளைஞர் வெலிக்கடை பொலிஸாரை அணுகி முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தாக்குதல் நடந்த நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, இளைஞர்களில் ஒருவரை வெலிக்கடை  பொலிஸார்  கைது செய்துள்ளனர்.மேலும் சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.தாக்குதல் நடந்த நேரத்தில் பிரபல நடிகையின் மகனும் சம்பவ இடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement