• Apr 30 2026

அரச காப்பகத்திலிருந்து காணாமல்போன சிறுமி; பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார்

Chithra / Jan 29th 2026, 9:52 pm
image


குருநாகல் -குளியாபிட்டிய, மீகஹகொட்டுவ அரச மகளிர் தடுப்புக்காவல் இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற சிறுமி  ஒருவர் பற்றிய தகவல்களை அறிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


குளியாப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


அதன்படி, 2025.07.14ஆம் திகதியன்று, சிலாபம் பொலிஸ் நிலையத்தால் சிறுமி பாதுகாப்பற்ற நிலையில் காவலில் எடுக்கப்பட்டு, சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அதே பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.


17.07.2025 அன்று சிறுமி மீண்டும் அதே குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.


இல. 06 ஹெனகெதர, உடுபத்தாவ எனும் முகவரில் வசிக்கும்  15 வயதுடைய வில்லாஃப் பிரான்சிஸ்கோ மயூமி பிரார்தனா எனும் சிறுமியே காணாமல்போயுள்ளார். 


சிறுமி தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால், 071-8591263 என்ற குளியாபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கோ அல்லது 037-2281222 என்ற குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 


அரச காப்பகத்திலிருந்து காணாமல்போன சிறுமி; பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார் குருநாகல் -குளியாபிட்டிய, மீகஹகொட்டுவ அரச மகளிர் தடுப்புக்காவல் இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற சிறுமி  ஒருவர் பற்றிய தகவல்களை அறிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.குளியாப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதன்படி, 2025.07.14ஆம் திகதியன்று, சிலாபம் பொலிஸ் நிலையத்தால் சிறுமி பாதுகாப்பற்ற நிலையில் காவலில் எடுக்கப்பட்டு, சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அதே பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.17.07.2025 அன்று சிறுமி மீண்டும் அதே குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.இல. 06 ஹெனகெதர, உடுபத்தாவ எனும் முகவரில் வசிக்கும்  15 வயதுடைய வில்லாஃப் பிரான்சிஸ்கோ மயூமி பிரார்தனா எனும் சிறுமியே காணாமல்போயுள்ளார். சிறுமி தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால், 071-8591263 என்ற குளியாபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கோ அல்லது 037-2281222 என்ற குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement