• Nov 12 2025

“நீங்களும் நானும் ஒன்று தான்” மக்களுடன் உரையாடிய அநுர; நடைபயிற்சியின் போது நிகழ்ந்த காட்சிகள் வைரல்!

shanuja / Oct 12th 2025, 8:55 pm
image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சக மக்களுடன் தோளில் கைபோட்டு உரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் பதுளை இடல்கஸ்ஹின்ன மலைப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 


இடல்கஸ்ஹின்ன மலைப்பகுதியில் இன்று அதிகாலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 


பலத்த பாதுகாப்புக்கள் எதுவுமின்றி குறிப்பிட்ட சில பாதுகாவலர்களுடன் சக மக்களைப் போன்று ஜனாதிபதி அநுர நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 


நடைபயிற்சியின் போது ஜனாதிபதி அநுரவைக் கண்ட மக்கள் வீதியில் நின்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 


அவ்வேளையில் ஜனாதிபதி அநுர அங்கிருந்த பிரதேசவாசிகளுடனும் கலந்துரையாடினார். நீங்களும் நானும் சகமக்கள் தான் என்ற ரீதியில் மக்களுடன் தோளுக்கு மேல் கைபோட்டு உரையாடியுள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தான் ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற பெருந்தன்மையின்றி அனைவரும் ஒன்று தான் என அவர் மக்களுடன் சகஜமாக உரையாடிய காட்சிகள் காணொளியாகப் பதிவாகி வெளிவந்து அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்து வைரலாகி வருகின்றது. 


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்ச்சியாக மக்களுடன் இவ்வாறு சகஜமாக செயற்பட்டு வருகின்றமை அவர் மீது மதிப்பு அதிகரித்து வருகின்றதாக மக்கள் பதிவிட்டு வருகின்றனர். 


இந்த நிகழ்வு வீட்டு பத்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதற்கு முன்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“நீங்களும் நானும் ஒன்று தான்” மக்களுடன் உரையாடிய அநுர; நடைபயிற்சியின் போது நிகழ்ந்த காட்சிகள் வைரல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சக மக்களுடன் தோளில் கைபோட்டு உரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் பதுளை இடல்கஸ்ஹின்ன மலைப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இடல்கஸ்ஹின்ன மலைப்பகுதியில் இன்று அதிகாலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பலத்த பாதுகாப்புக்கள் எதுவுமின்றி குறிப்பிட்ட சில பாதுகாவலர்களுடன் சக மக்களைப் போன்று ஜனாதிபதி அநுர நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். நடைபயிற்சியின் போது ஜனாதிபதி அநுரவைக் கண்ட மக்கள் வீதியில் நின்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் ஜனாதிபதி அநுர அங்கிருந்த பிரதேசவாசிகளுடனும் கலந்துரையாடினார். நீங்களும் நானும் சகமக்கள் தான் என்ற ரீதியில் மக்களுடன் தோளுக்கு மேல் கைபோட்டு உரையாடியுள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற பெருந்தன்மையின்றி அனைவரும் ஒன்று தான் என அவர் மக்களுடன் சகஜமாக உரையாடிய காட்சிகள் காணொளியாகப் பதிவாகி வெளிவந்து அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்து வைரலாகி வருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்ச்சியாக மக்களுடன் இவ்வாறு சகஜமாக செயற்பட்டு வருகின்றமை அவர் மீது மதிப்பு அதிகரித்து வருகின்றதாக மக்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிகழ்வு வீட்டு பத்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதற்கு முன்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement