மைக்ரோசொவ்ற் நிறுவனத்தின் Windows 10 மென்பொருளின் செயற்பாடு எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று மைக்ரோசொவ்ற் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விண்டோஸ் 10 (Windows 10) பயனர்களுக்கு இந்த அறிவிப்பை மைக்ரோசொவ்ற் நிறுவனம் விடுத்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 10ற்கான இலவச ஆதரவு, அதிகாரபூர்வமாக எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நிறைவடையும் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பிறகு, விண்டோஸ் 10 இயங்கும் சாதனங்களுக்கு மிக முக்கியமான பாதுகாப்புப் புதுப்பிப்புகள் (Security Patches), தொழில்நுட்பத் திருத்தங்கள் அல்லது புதிய அம்சங்கள் எதுவும் கிடைக்காது.
ஆதரவு முடிந்த பிறகும் விண்டோஸ் 10 இயங்கினாலும், பாதுகாப்புப் புதுப்பிப்புகள் இல்லாததால், அவை இணையத் தாக்குதல்களுக்கு இலக்காகக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் மைக்ரோசொவ்ற் நிறுவனம் பயனர்களை விண்டோஸ் 11க்கு மேம்படுத்துமாறு (Upgrade) வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் எல்லா கணினிகளுக்கும் அந்த மேம்பாட்டை மேற்கொள்ள முடியாது.
இத்தகைய பயனர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பெற, லினக்ஸ் அல்லது குரோம் ஓஎஸ் (Chrome OS) போன்ற மாற்று இயங்குதளங்களுக்கு மாறுவது நல்லது என மைக்ரோசொவ்ற் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
Windows 10 இன் செயற்பாடு ஒக்டோபர் 14 உடன் நிறைவு மைக்ரோசொவ்ற் நிறுவனத்தின் Windows 10 மென்பொருளின் செயற்பாடு எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று மைக்ரோசொவ்ற் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விண்டோஸ் 10 (Windows 10) பயனர்களுக்கு இந்த அறிவிப்பை மைக்ரோசொவ்ற் நிறுவனம் விடுத்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 10ற்கான இலவச ஆதரவு, அதிகாரபூர்வமாக எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நிறைவடையும் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.இதன்படி எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பிறகு, விண்டோஸ் 10 இயங்கும் சாதனங்களுக்கு மிக முக்கியமான பாதுகாப்புப் புதுப்பிப்புகள் (Security Patches), தொழில்நுட்பத் திருத்தங்கள் அல்லது புதிய அம்சங்கள் எதுவும் கிடைக்காது.ஆதரவு முடிந்த பிறகும் விண்டோஸ் 10 இயங்கினாலும், பாதுகாப்புப் புதுப்பிப்புகள் இல்லாததால், அவை இணையத் தாக்குதல்களுக்கு இலக்காகக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.இந்தநிலையில் மைக்ரோசொவ்ற் நிறுவனம் பயனர்களை விண்டோஸ் 11க்கு மேம்படுத்துமாறு (Upgrade) வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் எல்லா கணினிகளுக்கும் அந்த மேம்பாட்டை மேற்கொள்ள முடியாது.இத்தகைய பயனர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பெற, லினக்ஸ் அல்லது குரோம் ஓஎஸ் (Chrome OS) போன்ற மாற்று இயங்குதளங்களுக்கு மாறுவது நல்லது என மைக்ரோசொவ்ற் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.