• Oct 03 2026

நீதிமன்றில் ஆஜரான யோஷித ராஜபக்ஷ; சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

Chithra / Oct 2nd 2026, 12:43 pm
image


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணையை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கு இன்று (02) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.


எனினும், பிரதிவாதி தரப்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனம் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, வழக்கின் சாட்சி விசாரணையை ஒத்திவைக்குமாறு பிரதிவாதி தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.


அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் சாட்சி விசாரணையை ஒத்திவைக்க உத்தரவிட்டது.


தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 730 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை கொள்வனவு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் கூறி, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றில் ஆஜரான யோஷித ராஜபக்ஷ; சாட்சி விசாரணை ஒத்திவைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணையை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு இன்று (02) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.எனினும், பிரதிவாதி தரப்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனம் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, வழக்கின் சாட்சி விசாரணையை ஒத்திவைக்குமாறு பிரதிவாதி தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் சாட்சி விசாரணையை ஒத்திவைக்க உத்தரவிட்டது.தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 730 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை கொள்வனவு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் கூறி, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement