"சதுப்புநிலங்களுடன் தொடர்புடைய கலாசார பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய அறிவைக் கொண்டாடுதல்" எனும் தொனிப்பொருளில் உலக சதுப்புநில தினத்தை முன்னிட்டு இன்று (02) நடைபெறவுள்ள தேசிய நிகழ்வு, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள 'அபேகம' வளாகத்தில் நடைபெறவுள்ளது.
1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஈரானின் ரம்சார் (Ramsar) நகரில் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை எட்டப்பட்டது. இலங்கை இந்த உடன்படிக்கையில் 1991 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டது.
அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புகலிடமாக இது விளங்குகின்றது. அத்துடன் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலை வழங்குவதுடன், நீரைச் சேமித்து வைத்து வெள்ள அபாயத்தைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் தடுக்கின்றது.
மேலும் மனிதர்களின் நல்வாழ்விற்கு சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு அத்தியாவசியமானதாக கருதப்படுகின்றது.
பத்தரமுல்லையில் உலக சதுப்பு நில தின நிகழ்வுகள் "சதுப்புநிலங்களுடன் தொடர்புடைய கலாசார பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய அறிவைக் கொண்டாடுதல்" எனும் தொனிப்பொருளில் உலக சதுப்புநில தினத்தை முன்னிட்டு இன்று (02) நடைபெறவுள்ள தேசிய நிகழ்வு, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள 'அபேகம' வளாகத்தில் நடைபெறவுள்ளது. 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஈரானின் ரம்சார் (Ramsar) நகரில் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை எட்டப்பட்டது. இலங்கை இந்த உடன்படிக்கையில் 1991 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டது. அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புகலிடமாக இது விளங்குகின்றது. அத்துடன் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலை வழங்குவதுடன், நீரைச் சேமித்து வைத்து வெள்ள அபாயத்தைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் தடுக்கின்றது. மேலும் மனிதர்களின் நல்வாழ்விற்கு சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு அத்தியாவசியமானதாக கருதப்படுகின்றது.