• Sep 28 2026

நல்லதண்ணியாவில் நடைபெறும் உலக சுற்றுலா தினம்!

Aathira / Sep 27th 2026, 1:52 pm
image

2026ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா தின நிகழ்வுகள் இம்முறை நல்லதண்ணியாவில் நடைபெறவுள்ளன.

நல்லதண்ணியா மோகினி அருவிக்கு அருகில், மௌசாகலை நீர்த்தேக்கத்திற்கு மேலாக அமைந்துள்ள அழகிய இயற்கைச் சூழலில், எதிர்வரும் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

 “நல்லதண்ணியா ப்ரீஸ் அட்வென்ச்சர் ஃபீஸ்டா”  என்ற கருப்பொருளின் கீழ், மோகினி எல்ல அருவியை அண்மித்த பகுதியில் உலக சுற்றுலா தின நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய மாகாண வர்த்தகம், வணிகம் மற்றும் சுற்றுலாத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷா சுரங்க பெர்னாண்டோ உள்ளிட்டோர் அனுசரணை வழங்குகின்றனர்.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மஞ்சுளா சுரவீரராச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் நிகழ்வுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.

மேலும், மத்திய மாகாண சுற்றுலாத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்றும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக மத்திய மாகாண சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


நல்லதண்ணியாவில் நடைபெறும் உலக சுற்றுலா தினம் 2026ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா தின நிகழ்வுகள் இம்முறை நல்லதண்ணியாவில் நடைபெறவுள்ளன.நல்லதண்ணியா மோகினி அருவிக்கு அருகில், மௌசாகலை நீர்த்தேக்கத்திற்கு மேலாக அமைந்துள்ள அழகிய இயற்கைச் சூழலில், எதிர்வரும் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. “நல்லதண்ணியா ப்ரீஸ் அட்வென்ச்சர் ஃபீஸ்டா”  என்ற கருப்பொருளின் கீழ், மோகினி எல்ல அருவியை அண்மித்த பகுதியில் உலக சுற்றுலா தின நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மத்திய மாகாண வர்த்தகம், வணிகம் மற்றும் சுற்றுலாத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷா சுரங்க பெர்னாண்டோ உள்ளிட்டோர் அனுசரணை வழங்குகின்றனர்.நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மஞ்சுளா சுரவீரராச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் நிகழ்வுக்கு ஆதரவு வழங்குகின்றனர்.மேலும், மத்திய மாகாண சுற்றுலாத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்றும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக மத்திய மாகாண சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement