"போட்டிப் பரீட்சை இன்றி சேர்த்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இனிவரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்களா? இன்றுவரை அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் பட்டதாரிகளை நேரடியாக நியமிக்கக்கூடிய வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?" - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
"இலங்கையில் பட்டதாரி இளைஞர், யுவதிகளின் தொழில் இன்மையானது நீண்டகாலமாக நிலவி வரும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினை.
பட்டதாரிகளின் கல்வித் தகைமைகள் மற்றும் திறமைகளை நாட்டின் பொருளாதார மற்றும் அரச சேவைகளின் தேவைகளுடன் திறம்பட இணைத்து, அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் முக்கியமான பொறுப்பு.
தற்போதைய அரசும் பட்டதாரிகளுக்கு அரச துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் முன்வைத்துள்ளதுடன்,
அவைகளின் நடைமுறைப்படுத்தல், இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டம் என்பனவற்றைப் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது . அதற்கமைய, வேலையில்லாப் பட்டதாரிகளுக்காக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் பின்வரும் கேள்விகளை நான் முன்வைக்கிறேன்.
இலங்கையில் வேலையில்லாப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை அரசு இதுவரை உறுதியாக இனங்கண்டுள்ளதா? ஆமெனில், அந்த எண்ணிக்கை யாது? வருடாந்தம் அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவோரின் எண்ணிக்கை துறைசார் ரீதியாக எவ்வளவு?
அத்துடன், ஒவ்வொரு வருடமும் புதிதாகப் பட்டம் பெறும் தரப்பினர் வேலையில்லாப் பட்டதாரிகள் குழுவுடன் இணைவதைத் தவிர்ப்பதற்காக அரசிடம் காணப்படும் திட்டவட்டமான வேலைத்திட்டம் யாது?
இன்றுவரை அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் பட்டதாரிகளை நேரடியாக நியமிக்கக்கூடிய வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அந்த வெற்றிடங்களை ஒவ்வொரு சேவைகளின் அடிப்படையில் பிரித்துக் காட்ட முடியுமா?
குறித்த ஒட்டுமொத்த வெற்றிடங்களையும் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்கு முன்னர் பூர்த்தி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? அல்லது, அந்த வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் இறுதிக் காலக்கெடு யாது?
தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை பட்டதாரிகளுக்காக வழங்கப்பட்டுள்ள அரச சேவையின் நியமனங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அந்த நியமனங்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு சேவைகளின் கீழ் தனித்தனியாகக் குறிப்பிட முடியுமா?
போட்டிப் பரீட்சை இன்றி சேர்த்துக்கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இனிவரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்களா? அல்லது போட்டிப் பரீட்சையொன்றின் ஊடாகவேனும் எதிர்காலத்தில் சேர்த்துக்கொள்வதற்கு அரசு எதிர்பார்க்கின்றதா என்பதைத் துல்லியமாகக் குறிப்பிட முடியுமா?
அரச துறையின் அனைத்து ஆள்சேர்ப்புகளும், பதவி உயர்வுகளும் உரிய போட்டிப் பரீட்சைகள் மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைவாக மாத்திரமே மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி விடுத்துள்ள கூற்றின் ஊடாகவும் இது புலப்படுகின்றதல்லவா?
அரசால் அரச சேவைக்குப் பட்டதாரிகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் மாத்திரமே பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதா? அல்லது தனியார் துறை மற்றும் புதிய பொருளாதாரத் துறைகளில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தனியான தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? ஆமெனில், அந்தத் திட்டத்தின் வருடாந்த வேலைவாய்ப்பு இலக்கு எவ்வளவாகும்? எனக் கேட்கின்றேன்." - என்றார்.
வேலையற்றப் பட்டதாரிகளுக்காக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் யாவை சபையில் சஜித் கேள்வி "போட்டிப் பரீட்சை இன்றி சேர்த்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இனிவரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்களா இன்றுவரை அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் பட்டதாரிகளை நேரடியாக நியமிக்கக்கூடிய வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு" - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், "இலங்கையில் பட்டதாரி இளைஞர், யுவதிகளின் தொழில் இன்மையானது நீண்டகாலமாக நிலவி வரும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினை.பட்டதாரிகளின் கல்வித் தகைமைகள் மற்றும் திறமைகளை நாட்டின் பொருளாதார மற்றும் அரச சேவைகளின் தேவைகளுடன் திறம்பட இணைத்து, அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் முக்கியமான பொறுப்பு.தற்போதைய அரசும் பட்டதாரிகளுக்கு அரச துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான கொள்கைகளையும் வேலைத்திட்டங்களையும் முன்வைத்துள்ளதுடன், அவைகளின் நடைமுறைப்படுத்தல், இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டம் என்பனவற்றைப் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது . அதற்கமைய, வேலையில்லாப் பட்டதாரிகளுக்காக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் பின்வரும் கேள்விகளை நான் முன்வைக்கிறேன்.இலங்கையில் வேலையில்லாப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை அரசு இதுவரை உறுதியாக இனங்கண்டுள்ளதா ஆமெனில், அந்த எண்ணிக்கை யாது வருடாந்தம் அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவோரின் எண்ணிக்கை துறைசார் ரீதியாக எவ்வளவு அத்துடன், ஒவ்வொரு வருடமும் புதிதாகப் பட்டம் பெறும் தரப்பினர் வேலையில்லாப் பட்டதாரிகள் குழுவுடன் இணைவதைத் தவிர்ப்பதற்காக அரசிடம் காணப்படும் திட்டவட்டமான வேலைத்திட்டம் யாதுஇன்றுவரை அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் பட்டதாரிகளை நேரடியாக நியமிக்கக்கூடிய வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு அந்த வெற்றிடங்களை ஒவ்வொரு சேவைகளின் அடிப்படையில் பிரித்துக் காட்ட முடியுமா குறித்த ஒட்டுமொத்த வெற்றிடங்களையும் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்கு முன்னர் பூர்த்தி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா அல்லது, அந்த வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் இறுதிக் காலக்கெடு யாதுதற்போதைய அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை பட்டதாரிகளுக்காக வழங்கப்பட்டுள்ள அரச சேவையின் நியமனங்களின் எண்ணிக்கை எவ்வளவு அந்த நியமனங்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு சேவைகளின் கீழ் தனித்தனியாகக் குறிப்பிட முடியுமாபோட்டிப் பரீட்சை இன்றி சேர்த்துக்கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இனிவரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்களா அல்லது போட்டிப் பரீட்சையொன்றின் ஊடாகவேனும் எதிர்காலத்தில் சேர்த்துக்கொள்வதற்கு அரசு எதிர்பார்க்கின்றதா என்பதைத் துல்லியமாகக் குறிப்பிட முடியுமாஅரச துறையின் அனைத்து ஆள்சேர்ப்புகளும், பதவி உயர்வுகளும் உரிய போட்டிப் பரீட்சைகள் மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைவாக மாத்திரமே மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி விடுத்துள்ள கூற்றின் ஊடாகவும் இது புலப்படுகின்றதல்லவாஅரசால் அரச சேவைக்குப் பட்டதாரிகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் மாத்திரமே பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதா அல்லது தனியார் துறை மற்றும் புதிய பொருளாதாரத் துறைகளில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தனியான தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றதா ஆமெனில், அந்தத் திட்டத்தின் வருடாந்த வேலைவாய்ப்பு இலக்கு எவ்வளவாகும் எனக் கேட்கின்றேன்." - என்றார்.