• Aug 25 2026

கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக மாநாட்டு மண்டபம் ரூ. 12 மில்லியன் செலவில் பணிகள் ஆரம்பம்!

dorin / Aug 24th 2026, 3:16 pm
image

கிண்ணியா பிரதேச செயலகத்திற்கான புதிய நிர்வாக மாநாட்டு மண்டபம் (Administrative Conference Hall) அமைப்பதற்கான அடிக்கல் நட்டும் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எம்.ஈ.எம்.ராபிக் கலந்து கொண்டு நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இரண்டு மாடிகளைக் கொண்டதாகக் கட்டப்படவுள்ள இப்புதிய கட்டிடத்தின் கீழ் தளத்திற்கான முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக, உளநாட்டலுவல்கள் அமைச்சு (Ministry of Home Affairs) 12 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

இந்நிகழ்வில் பிரதேச திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஐ. முஜீத், நிர்வாக உத்தியோகத்தர் கே.எம். நிசவ்ஸ், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக மாநாட்டு மண்டபம் ரூ. 12 மில்லியன் செலவில் பணிகள் ஆரம்பம் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கான புதிய நிர்வாக மாநாட்டு மண்டபம் (Administrative Conference Hall) அமைப்பதற்கான அடிக்கல் நட்டும் நிகழ்வு இன்று (24) நடைபெற்றது.கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எம்.ஈ.எம்.ராபிக் கலந்து கொண்டு நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.இரண்டு மாடிகளைக் கொண்டதாகக் கட்டப்படவுள்ள இப்புதிய கட்டிடத்தின் கீழ் தளத்திற்கான முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக, உளநாட்டலுவல்கள் அமைச்சு (Ministry of Home Affairs) 12 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.இந்நிகழ்வில் பிரதேச திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஐ. முஜீத், நிர்வாக உத்தியோகத்தர் கே.எம். நிசவ்ஸ், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement