• Nov 11 2026

யாழில் பெண்கள் சந்தை ஆரம்பித்து வைப்பு!

Ziya / Nov 10th 2026, 2:45 pm
image

பெண்களின் தொழில்முயற்சிகளையும் பொருளாதார வலுவையும் ஊக்குவிக்கும் நோக்கில், FAIRMED Foundation நிறுவனம் யாழ்ப்பாணப் பெண்கள் சங்கங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண்கள் சந்தை இன்று (10.11.2026) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக, பழைய பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.


பெண்கள் குழுக்களால் தயாரிக்கப்பட்ட உள்ளூர் உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இச்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந் நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் அவர்கள் கண்காட்சியையும் விற்பனையையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.


மேலும், இந் நிகழ்வில் FAIRMED நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் வைத்திய கலாநிதி நயனி சூரியாராச்சி, வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் திருமதி கஜானி பார்த்தீபன், யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் திருமதி சிவகாமி உமாகாந்தன், மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இதில் உள்ளூர் இனிப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், தோல் பைகள், பனைசார் உற்பத்திப் பொருட்கள், ஆடைகள், சலவைத் திரவம், மெழுகுவர்த்திகள், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், மிளகாய்த்தூள், நொறுக்குத் தீனிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


பெண்களின் உற்பத்தித் திறனைச் சந்தை வாய்ப்புகளுடன் இணைத்து, சுயதொழில் முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கும், பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கும் இத்தகைய சந்தைகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.


யாழில் பெண்கள் சந்தை ஆரம்பித்து வைப்பு பெண்களின் தொழில்முயற்சிகளையும் பொருளாதார வலுவையும் ஊக்குவிக்கும் நோக்கில், FAIRMED Foundation நிறுவனம் யாழ்ப்பாணப் பெண்கள் சங்கங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண்கள் சந்தை இன்று (10.11.2026) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக, பழைய பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.பெண்கள் குழுக்களால் தயாரிக்கப்பட்ட உள்ளூர் உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இச்சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந் நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் அவர்கள் கண்காட்சியையும் விற்பனையையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.மேலும், இந் நிகழ்வில் FAIRMED நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் வைத்திய கலாநிதி நயனி சூரியாராச்சி, வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் திருமதி கஜானி பார்த்தீபன், யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் திருமதி சிவகாமி உமாகாந்தன், மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.இதில் உள்ளூர் இனிப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், தோல் பைகள், பனைசார் உற்பத்திப் பொருட்கள், ஆடைகள், சலவைத் திரவம், மெழுகுவர்த்திகள், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், மிளகாய்த்தூள், நொறுக்குத் தீனிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.பெண்களின் உற்பத்தித் திறனைச் சந்தை வாய்ப்புகளுடன் இணைத்து, சுயதொழில் முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கும், பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கும் இத்தகைய சந்தைகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.

Advertisement

Advertisement

Advertisement