கொழும்பு – பதுளை பிரதான வீதியில், ஹப்புத்தளை மற்றும் பெரகலைக்கு இடைப்பட்ட ஐஸ்பீலி பகுதியில் நேற்று (02) நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன், சிறிய ரக வாகனங்கள் மாத்திரமே பயணிக்கக்கூடிய நிலை உருவானது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், வீதியில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவந்தனர்.
இச்சம்பவத்தில் 33,000 வோல்ட் மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய மின்கம்பமொன்று முற்றாக உடைந்து சேதமடைந்ததுடன், மற்றுமொரு மின்கம்பமும் சரிந்து விழுந்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலையால் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், சாரதிகளும் பொதுமக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஐஸ்பீலி பகுதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம் கொழும்பு – பதுளை பிரதான வீதியில், ஹப்புத்தளை மற்றும் பெரகலைக்கு இடைப்பட்ட ஐஸ்பீலி பகுதியில் நேற்று (02) நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.இதனால் குறித்த வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன், சிறிய ரக வாகனங்கள் மாத்திரமே பயணிக்கக்கூடிய நிலை உருவானது.இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், வீதியில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவந்தனர்.இச்சம்பவத்தில் 33,000 வோல்ட் மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய மின்கம்பமொன்று முற்றாக உடைந்து சேதமடைந்ததுடன், மற்றுமொரு மின்கம்பமும் சரிந்து விழுந்துள்ளது.பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலையால் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், சாரதிகளும் பொதுமக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.