சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மலையக சிறுவர் இல்லத்தின் கேட்போர் கூடத்தில் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் சிறப்புக் கூட்டம் ஒன்று நேற்று (17) நடைபெற்றது. இந்நிகழ்வில் காங்கிரஸின் தலைவரும் மலையக சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகருமாகிய ஆர். எம். கிருஷ்ணசாமி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேற்படி அமைப்பின் செயலாளரான செல்வி ஏ.யாழினி கலந்து கொண்டு பெண்களின் உரிமைகள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கருத்துகளை முன்வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றியவர்கள் தெரிவித்ததாவது, இலங்கையில் உலக மகளிர் தினம் பல ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகின்ற போதிலும் பெண்களின் உரிமைகள் இன்னும் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். குடும்பம், கல்வி, வேலை வாய்ப்பு, சமூக பாதுகாப்பு போன்ற பல துறைகளிலும் பெண்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வேலைத் தளங்களில் சமமான சம்பளம் இல்லாமை, பாதுகாப்பின்மை, பாலின அடிப்படையிலான பாகுபாடு, குடும்பப் பொறுப்புகள் காரணமாக கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்தில் தடைகள் போன்ற பிரச்சினைகள் பெண்களை இன்னும் பாதித்து வருகின்றன எனவும் குறிப்பிடப்பட்டார்கள். இத்தகைய நிலையை மாற்ற பெண்களே தங்களுடைய உரிமைகள் குறித்து விழிப்புணர்வுடன் முன்னேற வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் ஆடைத் தொழிலில் பணியாற்றும் பெண்களுக்கு உரிய தங்குமிட வசதிகள், பாதுகாப்பான பணிச் சூழல் மற்றும் நலன்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இன்றைய நிலையில் இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை நாட்டிற்கு வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் முக்கியமான பொருளாதாரத் துறையாக விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இத்துறையில் பணியாற்றும் பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது.
அத்துடன் சில வியாபார தளங்களில் பெண்களை முன்னிறுத்தி பயன்படுத்துவது பெண்களின் மரியாதைக்கும் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாக காணப்படுகின்றது என்றும் இதுபோன்ற நடைமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கருத்து வெளியிடப்பட்டது.
பெண்களின் உரிமைகள், சமத்துவம், பாதுகாப்பு மற்றும் சமூக மரியாதை ஆகியவை உறுதிசெய்யப்படும் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. அதனுடன், உலக மகளிர் தினத்தை சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கவும் தீ ர்மானிக்கப்பட்டது.
மகளிர் தினத்தை சம்பளத்துடன் கூடிய விடுமுறை தினமாக்க வேண்டும் -வி.தோ.தொ.காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மலையக சிறுவர் இல்லத்தின் கேட்போர் கூடத்தில் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் சிறப்புக் கூட்டம் ஒன்று நேற்று (17) நடைபெற்றது. இந்நிகழ்வில் காங்கிரஸின் தலைவரும் மலையக சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகருமாகிய ஆர். எம். கிருஷ்ணசாமி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். மேற்படி அமைப்பின் செயலாளரான செல்வி ஏ.யாழினி கலந்து கொண்டு பெண்களின் உரிமைகள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கருத்துகளை முன்வைத்தார்.இந்நிகழ்வில் உரையாற்றியவர்கள் தெரிவித்ததாவது, இலங்கையில் உலக மகளிர் தினம் பல ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகின்ற போதிலும் பெண்களின் உரிமைகள் இன்னும் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். குடும்பம், கல்வி, வேலை வாய்ப்பு, சமூக பாதுகாப்பு போன்ற பல துறைகளிலும் பெண்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக வேலைத் தளங்களில் சமமான சம்பளம் இல்லாமை, பாதுகாப்பின்மை, பாலின அடிப்படையிலான பாகுபாடு, குடும்பப் பொறுப்புகள் காரணமாக கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்தில் தடைகள் போன்ற பிரச்சினைகள் பெண்களை இன்னும் பாதித்து வருகின்றன எனவும் குறிப்பிடப்பட்டார்கள். இத்தகைய நிலையை மாற்ற பெண்களே தங்களுடைய உரிமைகள் குறித்து விழிப்புணர்வுடன் முன்னேற வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டது.மேலும் ஆடைத் தொழிலில் பணியாற்றும் பெண்களுக்கு உரிய தங்குமிட வசதிகள், பாதுகாப்பான பணிச் சூழல் மற்றும் நலன்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இன்றைய நிலையில் இலங்கையின் ஆடை உற்பத்தித் துறை நாட்டிற்கு வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் முக்கியமான பொருளாதாரத் துறையாக விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இத்துறையில் பணியாற்றும் பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது.அத்துடன் சில வியாபார தளங்களில் பெண்களை முன்னிறுத்தி பயன்படுத்துவது பெண்களின் மரியாதைக்கும் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாக காணப்படுகின்றது என்றும் இதுபோன்ற நடைமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கருத்து வெளியிடப்பட்டது.பெண்களின் உரிமைகள், சமத்துவம், பாதுகாப்பு மற்றும் சமூக மரியாதை ஆகியவை உறுதிசெய்யப்படும் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. அதனுடன், உலக மகளிர் தினத்தை சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கவும் தீ ர்மானிக்கப்பட்டது.