• May 28 2025

எட்டு தடவை கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு ஒன்பதாவது குழந்தை பிரசவிப்பு..! யாழில் புத்தாண்டு தினத்தில் மகிழ்ச்சி சம்பவம்

Chithra / Jan 1st 2024, 3:27 pm
image



யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்துள்ளார்.

புத்தாண்டு தினமான இன்று இக் குழந்தையை பிரசவித்துள்ளார்.

24 வயதான மேற்படி தாயார், திருமணம் முடித்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டுத்தடவை கருச்சிதைவு ஏற்ப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் இந்த தாயார் கரப்பத்திற்கு முன்னரும், கர்ப்ப காலத்திலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று புது வருடதினத்தில் ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்தார்.

மகப்பேற்று வைத்திய நிபுணர் சிவராஜா சிஜெதரா மருத்துவக்குழுவனரே மேற்படி தாய்க்கு சிகிச்சை வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எட்டு தடவை கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணுக்கு ஒன்பதாவது குழந்தை பிரசவிப்பு. யாழில் புத்தாண்டு தினத்தில் மகிழ்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்துள்ளார்.யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்துள்ளார்.புத்தாண்டு தினமான இன்று இக் குழந்தையை பிரசவித்துள்ளார்.24 வயதான மேற்படி தாயார், திருமணம் முடித்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டுத்தடவை கருச்சிதைவு ஏற்ப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.அதன் பின்னர் இந்த தாயார் கரப்பத்திற்கு முன்னரும், கர்ப்ப காலத்திலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் இன்று புது வருடதினத்தில் ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்தார்.மகப்பேற்று வைத்திய நிபுணர் சிவராஜா சிஜெதரா மருத்துவக்குழுவனரே மேற்படி தாய்க்கு சிகிச்சை வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now