• Jun 13 2026

19 கோடி ரூபா போலி அமெரிக்க டொலர்களுடன் சிக்கிய பெண் அதிரடி கைது!

shanu / Jun 8th 2026, 6:40 pm
image

கொழும்பு, வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 19 கோடி ரூபா பெறுமதியான போலி அமெரிக்க டொலர் நோட்டுகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு  கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட விசேட அதிரடி சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அங்கு தங்கியிருந்த பெண்ணின் வசமிருந்த போலி வெளிநாட்டு நாணயங்களை சோதனையிட்ட காவல்துறையினர், அவற்றை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போலி அமெரிக்க டொலர் நோட்டுகளின் மொத்தப் பெறுமதி இலங்கை ரூபாயில் சுமார் 19 கோடியைத் (190 மில்லியன்) தாண்டும் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இவ்வளவு பெரிய அளவில் போலி வெளிநாட்டு நாணயங்கள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டமையானது குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

19 கோடி ரூபா போலி அமெரிக்க டொலர்களுடன் சிக்கிய பெண் அதிரடி கைது கொழும்பு, வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 19 கோடி ரூபா பெறுமதியான போலி அமெரிக்க டொலர் நோட்டுகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு  கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட விசேட அதிரடி சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.அங்கு தங்கியிருந்த பெண்ணின் வசமிருந்த போலி வெளிநாட்டு நாணயங்களை சோதனையிட்ட காவல்துறையினர், அவற்றை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட போலி அமெரிக்க டொலர் நோட்டுகளின் மொத்தப் பெறுமதி இலங்கை ரூபாயில் சுமார் 19 கோடியைத் (190 மில்லியன்) தாண்டும் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வளவு பெரிய அளவில் போலி வெளிநாட்டு நாணயங்கள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டமையானது குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement