தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெற்றிபெற வேண்டும் என இளைஞர்கள், இரசிகர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் பல ஆலயங்களுக்குச் சென்று விசேட வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23 ஆம் திகதி இடம்பெற்றது.
அதற்கமைய தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.
அதன்படி தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் 102 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் முன்னிலையில் உள்ளார் என்ற முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அவரது ஆதரவாளர்கள், இரசிகர்கள் எனப் பலரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
தங்களது மகிழ்ச்சியையும் ஆதரவையும் வழங்கியதோடு விஜய் வெற்றிபெற வேண்டும் என ஆலயங்களுக்குச் சென்று விசேட வழிபாடுகளையும் அர்ச்சனைகளையும் செய்து வருகின்றனர்.
இதில் இளைஞர்கள் சிலர் ஆலயங்களுக்குச் சென்று எப்படியாவது ஜெயிச்சிடுங்க அண்ணா எனக் கூறி அர்ச்சனை செய்துள்ளனர். இதேவேளை விஜயின் தந்தை இயக்குநர் சந்திரசேகரும் காலை முதல் ஆலயங்களில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயை வெறும் நடிகராகவோ அல்லது அரசியல் தலைவராகவோ பாராது தங்கள் வீட்டுப் பிள்ளையாக தங்கள் அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, தங்களில் ஒருவனாக கோடிக்கணக்கானோர் நேசித்து வருகின்றனர்.
நடிகராக இருக்கும்போது அவருக்கு கோடிக்கணக்கில் இரசிகர்கள் காணப்பட்டனர். சினிமாவிலிருந்து விலகி அரசியலில் கால்பதித்தவுடனும் அதே இரசிகர்கள் அவருக்கு ஆதரவாளராக எழுந்தனர்.
இந்தப் பின்னணியில் தான் தமது அண்ணன் தமிழ்நாட்டு முதல்வராக வேண்டும் என இரசிகர்கள் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்கு விஜய் முன்னிலையில் உள்ளதால் அவரது வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தலின் ஒவ்வொரு தொகுதி முடிவுகளையும் ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமன்றி உலகேமே பரபரப்புடன் எதிர்பார்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜெயிச்சிடுங்க அண்ணா -ஆலயங்களில் இளைஞர்கள் அர்ச்சனை பரபரப்பில் தமிழ்நாடு தேர்தல் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெற்றிபெற வேண்டும் என இளைஞர்கள், இரசிகர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் பல ஆலயங்களுக்குச் சென்று விசேட வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23 ஆம் திகதி இடம்பெற்றது. அதற்கமைய தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் 102 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் முன்னிலையில் உள்ளார் என்ற முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அவரது ஆதரவாளர்கள், இரசிகர்கள் எனப் பலரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். தங்களது மகிழ்ச்சியையும் ஆதரவையும் வழங்கியதோடு விஜய் வெற்றிபெற வேண்டும் என ஆலயங்களுக்குச் சென்று விசேட வழிபாடுகளையும் அர்ச்சனைகளையும் செய்து வருகின்றனர். இதில் இளைஞர்கள் சிலர் ஆலயங்களுக்குச் சென்று எப்படியாவது ஜெயிச்சிடுங்க அண்ணா எனக் கூறி அர்ச்சனை செய்துள்ளனர். இதேவேளை விஜயின் தந்தை இயக்குநர் சந்திரசேகரும் காலை முதல் ஆலயங்களில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயை வெறும் நடிகராகவோ அல்லது அரசியல் தலைவராகவோ பாராது தங்கள் வீட்டுப் பிள்ளையாக தங்கள் அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, தங்களில் ஒருவனாக கோடிக்கணக்கானோர் நேசித்து வருகின்றனர். நடிகராக இருக்கும்போது அவருக்கு கோடிக்கணக்கில் இரசிகர்கள் காணப்பட்டனர். சினிமாவிலிருந்து விலகி அரசியலில் கால்பதித்தவுடனும் அதே இரசிகர்கள் அவருக்கு ஆதரவாளராக எழுந்தனர். இந்தப் பின்னணியில் தான் தமது அண்ணன் தமிழ்நாட்டு முதல்வராக வேண்டும் என இரசிகர்கள் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்கு விஜய் முன்னிலையில் உள்ளதால் அவரது வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தலின் ஒவ்வொரு தொகுதி முடிவுகளையும் ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமன்றி உலகேமே பரபரப்புடன் எதிர்பார்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.