நீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
வழக்கமாக வருடத்தில் இருமுறை மட்டுமே கட்டணத் திருத்தங்கள் குறித்து ஆராயப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத் தேவைகளைக் கருத்திற் கொண்டு அம்பத்தலேயில் மேலதிகமாக 50,000 கன மீற்றர் உற்பத்தி நிலையமும், களு கங்கைத் திட்டத்தின் கீழ் 136,000 கன மீற்றர் நிலையமும் அமைக்கப்படவுள்ளன.
வறட்சி நீடித்தால் நீர் விநியோகத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுதல் மற்றும் வாகனங்களைக் கழுவுதல் போன்ற அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
நீர் கட்டணம் அதிகரிக்கப்படுமா. மக்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை நீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.வழக்கமாக வருடத்தில் இருமுறை மட்டுமே கட்டணத் திருத்தங்கள் குறித்து ஆராயப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத் தேவைகளைக் கருத்திற் கொண்டு அம்பத்தலேயில் மேலதிகமாக 50,000 கன மீற்றர் உற்பத்தி நிலையமும், களு கங்கைத் திட்டத்தின் கீழ் 136,000 கன மீற்றர் நிலையமும் அமைக்கப்படவுள்ளன. வறட்சி நீடித்தால் நீர் விநியோகத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுதல் மற்றும் வாகனங்களைக் கழுவுதல் போன்ற அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார பொதுமக்களிடம் கோரியுள்ளார்.