பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை ரூ.17 ஆல் அதிகரித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பு நேற்றுமுன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளமையே மாவின் விலையை உயர்த்துவதற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாவின் விலை உயர்வுக்கு ஏற்ப பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்குமா இன்று முக்கிய தீர்மானம் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை ரூ.17 ஆல் அதிகரித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பு நேற்றுமுன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளமையே மாவின் விலையை உயர்த்துவதற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, மாவின் விலை உயர்வுக்கு ஏற்ப பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.கோதுமை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.