• Apr 19 2026

அரிசி விலை அதிகரிக்குமா? தட்டுப்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Chithra / Mar 17th 2026, 8:48 am
image


அரசாங்கத்திடம் 3 மாதங்களுக்குத் தேவையான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அதன்படி, எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.


இந்தநிலையில் அரிசியின் விலை அதிகரிக்கப்படாது எனவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.


சந்தையில் கோழி இறைச்சி ஒரு கிலோ ரூபா 1,400 ஆக உயர்ந்துள்ளதாக பஸ்டியன் மாவத்தை கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.ஐ.எம். இக்பால் தெரிவித்துள்ளார். முட்டையொன்றின் விலை 35 முதல் 40 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரிசி விலை அதிகரிக்குமா தட்டுப்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு அரசாங்கத்திடம் 3 மாதங்களுக்குத் தேவையான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் அரிசியின் விலை அதிகரிக்கப்படாது எனவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.சந்தையில் கோழி இறைச்சி ஒரு கிலோ ரூபா 1,400 ஆக உயர்ந்துள்ளதாக பஸ்டியன் மாவத்தை கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.ஐ.எம். இக்பால் தெரிவித்துள்ளார். முட்டையொன்றின் விலை 35 முதல் 40 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement