• May 01 2025

ஆகஸ்ட்டில் ஜனாதிபதியாகும் ரணில்? - வாய்ப்பில்லை ஆளுந் தரப்பு பதிலடி..!

Sharmi / Apr 28th 2025, 3:13 pm
image

சஜித் டிசம்பரில் ஜனாதிபதி பதவிக்கு வருவார் எனவும் ரணில் ஆகஸ்ட்டில் ஜனாதிபதியாவார் எனவும் பல்வேறு கருத்துக்கள் எதிர்த்தரப்பால் பகிர்ந்துவரும் நிலையில் அவை உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் எதிரணிகளின் தோல்வியையே வெளிப்படுத்துவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல தேர்தல்களில் தோல்வி அடைந்த ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி ஆக போகின்றாராம்.

அவர் எப்படி அப்பதவிக்கு வருவார் என தெரியவில்லை.

அதன்பிறகு டிசம்பரில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவார் என கபீர் ஹாசீம் கூறியுள்ளார்.

இதுவும் எப்படி சாத்தியம் என தெரியவில்லை.

நாம் ஆட்சிக்குவந்தபோது ஒரு மாதத்தில் ஆட்கி கவிழும் என்றார்கள், சொத்துகள் பறிக்கப்படும் என்றார்கள்.

தற்போது ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. இப்போது எமக்கு டிசம்பர்வரைதான் அவகாசமாம். எதிரணிகளுக்கு பேசுவதற்கு ஒன்றும் இல்லை.

அதனால்தான் சாத்தியமற்ற விடயங்கள் பற்றி பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றன. எதிரணிகளின் தோல்வியையே இவை வெளிப்படுத்துகின்றன எனவும் தெரிவித்தார்.


ஆகஸ்ட்டில் ஜனாதிபதியாகும் ரணில் - வாய்ப்பில்லை ஆளுந் தரப்பு பதிலடி. சஜித் டிசம்பரில் ஜனாதிபதி பதவிக்கு வருவார் எனவும் ரணில் ஆகஸ்ட்டில் ஜனாதிபதியாவார் எனவும் பல்வேறு கருத்துக்கள் எதிர்த்தரப்பால் பகிர்ந்துவரும் நிலையில் அவை உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் எதிரணிகளின் தோல்வியையே வெளிப்படுத்துவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பல தேர்தல்களில் தோல்வி அடைந்த ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி ஆக போகின்றாராம். அவர் எப்படி அப்பதவிக்கு வருவார் என தெரியவில்லை.அதன்பிறகு டிசம்பரில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவார் என கபீர் ஹாசீம் கூறியுள்ளார். இதுவும் எப்படி சாத்தியம் என தெரியவில்லை.நாம் ஆட்சிக்குவந்தபோது ஒரு மாதத்தில் ஆட்கி கவிழும் என்றார்கள், சொத்துகள் பறிக்கப்படும் என்றார்கள். தற்போது ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. இப்போது எமக்கு டிசம்பர்வரைதான் அவகாசமாம். எதிரணிகளுக்கு பேசுவதற்கு ஒன்றும் இல்லை.அதனால்தான் சாத்தியமற்ற விடயங்கள் பற்றி பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றன. எதிரணிகளின் தோல்வியையே இவை வெளிப்படுத்துகின்றன எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement