இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை உயர்த்திய போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாயினாலும் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கிடையில், எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, ஓர் இடைக்கால பேருந்து கட்டண திருத்தத்தை மேற்கொள்ளுமாறு லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன,
எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவிருக்கும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு முன்னதாக இந்த இடைக்கால திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதன்படி, வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 சதவீத கட்டண உயர்வை அவர்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது காணப்படும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 32 ரூபா அல்லது 33 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்து உரிமையாளர்கள் தற்போது ஒரு பயணத்திற்கு சுமார் 25 ரூபா நஷ்டத்திலேயே சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணங்களும் அதிகரிக்குமா விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் விலையை உயர்த்திய போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாயினாலும் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.இதற்கிடையில், எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, ஓர் இடைக்கால பேருந்து கட்டண திருத்தத்தை மேற்கொள்ளுமாறு லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவிருக்கும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு முன்னதாக இந்த இடைக்கால திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.அதன்படி, வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 சதவீத கட்டண உயர்வை அவர்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், தற்போது காணப்படும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணத்தை 32 ரூபா அல்லது 33 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்து உரிமையாளர்கள் தற்போது ஒரு பயணத்திற்கு சுமார் 25 ரூபா நஷ்டத்திலேயே சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.