கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் மீரிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெந்தபொல பகுதியில் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் ரெந்தபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை; கணவன் கைது குடும்பத்தகராறால் விபரீதம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் மீரிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெந்தபொல பகுதியில் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் ரெந்தபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.