• Sep 08 2026

நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியில்; ஜனாதிபதிக்கு பலத்த பாதுகாப்பு ஏன்? – திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி!

Chithra / Sep 7th 2026, 3:36 pm
image

 



கொழும்பு, எதுல்கோட்டேயில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.


ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்கள், கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவோ அல்லது மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்களை அறிவிக்கவோ நடத்தப்படவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.


மாறாக, பழைய பொய்களை மீண்டும் சமூகத்தில் பரப்பி, அரசாங்கத்தின் மீதான மக்களின் விரக்தியை மறைத்து, மக்களை மீண்டும் ஏமாற்றும் நோக்கிலேயே இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


தேசிய மக்கள் சக்தியின் பேருவலைக் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் விமர்சித்துள்ளார். ஜனாதிபதியின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பேருவலை மீன்பிடித் துறைமுகத்திற்குள் படகுகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும், இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில், ஜனாதிபதியின் கூட்டங்களுக்கு பெருமளவு பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த சில மாதங்களில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் 17 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை நாட்டின் உண்மையான பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கேள்விகளை எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதிகளின் கூட்டங்களை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தற்போது அரச வாகனங்கள், பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் மற்றும் அரச நிதியைப் பயன்படுத்தி தனது கட்சியின் கூட்டங்களை நடத்துவதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.


இது அரச நிதி மற்றும் அரச வளங்களை நேரடியாகத் துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


சுகாதாரத் துறை தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்கு முன்னர் சுகாதாரத் துறைக்கான VAT வரிகளை நீக்குவதாக வாக்குறுதியளித்த ஜனாதிபதி, தற்போது மக்கள் தமக்குத் தேவையான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்வதை கட்டுப்படுத்தும் வகையில், மருத்துவரின் பரிந்துரையுடனேயே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்.


இவ்வாறான நடவடிக்கைகள் இலவச சுகாதார சேவையை படிப்படியாக இல்லாதொழிக்கும் முயற்சியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதேவேளை, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைப்பதற்கு முன்னரே ஜனாதிபதி அது தொடர்பில் கருத்து வெளியிட்டமை தவறான முன்னுதாரணம் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.


நீதிமன்றத் தீர்ப்பை முன்கூட்டியே கணித்து செயற்பட முடியாது எனக் குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பு ரீதியான குழப்பங்களைத் தவிர்க்க இந்த விவகாரம் தொடர்பில் மக்கள் தீர்ப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


நாட்டின் பொருளாதார நிலைமை குறித்துப் பேசிய அவர், அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தரமற்ற 19 நிலக்கரி கப்பல்கள் காரணமாக சுமார் 10,000 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் இரகசியமாக வெளியேற்றப்பட்டமை மற்றும் திறைசேரிக்கு 2.5 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டமை உள்ளிட்ட தவறான நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் கருப்புப் பொருளாதாரம் தீவிரமடைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


இதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், எதிர்க்கட்சி அரசியலை அழிப்பதாக இராணுவ மற்றும் பாதுகாப்புத் தரப்பு அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் ஜனநாயகத்திற்கு நேரடியான அச்சுறுத்தல் எனக் கண்டித்த திஸ்ஸ அத்தநாயக்க, மக்கள் ஆணையின்றி அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் எந்தவொரு அரசாங்கத்தையும் மக்கள் இறுதியில் விரட்டியடிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சியை அச்சுறுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் பதிலளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியில்; ஜனாதிபதிக்கு பலத்த பாதுகாப்பு ஏன் – திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி  கொழும்பு, எதுல்கோட்டேயில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்கள், கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவோ அல்லது மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்களை அறிவிக்கவோ நடத்தப்படவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.மாறாக, பழைய பொய்களை மீண்டும் சமூகத்தில் பரப்பி, அரசாங்கத்தின் மீதான மக்களின் விரக்தியை மறைத்து, மக்களை மீண்டும் ஏமாற்றும் நோக்கிலேயே இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் பேருவலைக் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் விமர்சித்துள்ளார். ஜனாதிபதியின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பேருவலை மீன்பிடித் துறைமுகத்திற்குள் படகுகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும், இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில், ஜனாதிபதியின் கூட்டங்களுக்கு பெருமளவு பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த சில மாதங்களில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் 17 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை நாட்டின் உண்மையான பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கேள்விகளை எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதிகளின் கூட்டங்களை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தற்போது அரச வாகனங்கள், பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் மற்றும் அரச நிதியைப் பயன்படுத்தி தனது கட்சியின் கூட்டங்களை நடத்துவதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.இது அரச நிதி மற்றும் அரச வளங்களை நேரடியாகத் துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சுகாதாரத் துறை தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்கு முன்னர் சுகாதாரத் துறைக்கான VAT வரிகளை நீக்குவதாக வாக்குறுதியளித்த ஜனாதிபதி, தற்போது மக்கள் தமக்குத் தேவையான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்வதை கட்டுப்படுத்தும் வகையில், மருத்துவரின் பரிந்துரையுடனேயே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறியுள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகள் இலவச சுகாதார சேவையை படிப்படியாக இல்லாதொழிக்கும் முயற்சியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேவேளை, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைப்பதற்கு முன்னரே ஜனாதிபதி அது தொடர்பில் கருத்து வெளியிட்டமை தவறான முன்னுதாரணம் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.நீதிமன்றத் தீர்ப்பை முன்கூட்டியே கணித்து செயற்பட முடியாது எனக் குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பு ரீதியான குழப்பங்களைத் தவிர்க்க இந்த விவகாரம் தொடர்பில் மக்கள் தீர்ப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.நாட்டின் பொருளாதார நிலைமை குறித்துப் பேசிய அவர், அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தரமற்ற 19 நிலக்கரி கப்பல்கள் காரணமாக சுமார் 10,000 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் இரகசியமாக வெளியேற்றப்பட்டமை மற்றும் திறைசேரிக்கு 2.5 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டமை உள்ளிட்ட தவறான நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் கருப்புப் பொருளாதாரம் தீவிரமடைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.இதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், எதிர்க்கட்சி அரசியலை அழிப்பதாக இராணுவ மற்றும் பாதுகாப்புத் தரப்பு அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் ஜனநாயகத்திற்கு நேரடியான அச்சுறுத்தல் எனக் கண்டித்த திஸ்ஸ அத்தநாயக்க, மக்கள் ஆணையின்றி அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் எந்தவொரு அரசாங்கத்தையும் மக்கள் இறுதியில் விரட்டியடிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சியை அச்சுறுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் பதிலளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement