• Apr 15 2026

ஈரான் கார்க் தீவு தாக்கப்பட்டால் என்ன செய்வது? இதற்கு அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது?

shanu / Mar 18th 2026, 11:51 am
image

ஈரான் கார்க் தீவு தாக்கப்பட்டால் என்ன செய்வது? இதற்கு அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார். 


பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கேள்வியெழுப்புகையில் அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருக்கின்ற மோதல் நிலமை காரணமாக இலங்கைக்கு கச்சா எண்ணெய்  மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலமை குறித்து அரசாங்கம் இடர் மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டுள்ளதா? 


ஹோர்மூஸ் நீரிணையை மூடப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட ஆபத்தான நிலைமை காரணமாக கடந்த விவாதத்தில் சுட்டிக்காட்டினோம். 


அரசாங்கத்திற்கு அதிலிருந்து கிடைத்த பதில் தான் எந்தப் பிரச்சினையும் இல்லை. எந்தத் தாக்கமும் இல்லை. ஆனால் நான் குறிப்பிடுகின்றேன். 


சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய், உரம், இரசாயன பதார்த்தங்கள், எரிபொருள்கள், உணவு, விவசாய வர்த்தகம், தானிய வகைகள் என்று நீண்டதொரு பட்டியல் உள்ளது. 


இந்த ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. இதற்கான மதிப்பீடு ஒன்றை உருவாக்கி இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பீர்களா என்று கேட்கின்றேன். 


ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றிற்கு வந்து 38 நாட்களுக்கு போதுமான எரிபொருள் உள்ளது எனக் கூறியிருந்தார். எரிபொருளுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். ஏழு நாட்கள் கழித்து பழைய இருப்புக்குரிய விலையை வழங்கினார்கள் . தற்போது இருக்கின்ற எரிபொருள் இருப்பு என்ன? என்பதை அரசாங்கம் சமர்ப்பிக்குமா? 


மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த நிலை எனில் ஈரான் கார்க் தீவு தாக்கப்பட்டால் என்ன செய்வது? இதற்கு அரசாங்கம் ஏதாவது திட்டம் வைத்துள்ளதா என்று கேள்வியெழுப்பினார்.

ஈரான் கார்க் தீவு தாக்கப்பட்டால் என்ன செய்வது இதற்கு அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது ஈரான் கார்க் தீவு தாக்கப்பட்டால் என்ன செய்வது இதற்கு அரசாங்கத்திடம் என்ன திட்டம் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கேள்வியெழுப்புகையில் அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருக்கின்ற மோதல் நிலமை காரணமாக இலங்கைக்கு கச்சா எண்ணெய்  மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய ஆபத்தான நிலமை குறித்து அரசாங்கம் இடர் மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டுள்ளதா ஹோர்மூஸ் நீரிணையை மூடப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட ஆபத்தான நிலைமை காரணமாக கடந்த விவாதத்தில் சுட்டிக்காட்டினோம். அரசாங்கத்திற்கு அதிலிருந்து கிடைத்த பதில் தான் எந்தப் பிரச்சினையும் இல்லை. எந்தத் தாக்கமும் இல்லை. ஆனால் நான் குறிப்பிடுகின்றேன். சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய், உரம், இரசாயன பதார்த்தங்கள், எரிபொருள்கள், உணவு, விவசாய வர்த்தகம், தானிய வகைகள் என்று நீண்டதொரு பட்டியல் உள்ளது. இந்த ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. இதற்கான மதிப்பீடு ஒன்றை உருவாக்கி இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பீர்களா என்று கேட்கின்றேன். ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றிற்கு வந்து 38 நாட்களுக்கு போதுமான எரிபொருள் உள்ளது எனக் கூறியிருந்தார். எரிபொருளுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். ஏழு நாட்கள் கழித்து பழைய இருப்புக்குரிய விலையை வழங்கினார்கள் . தற்போது இருக்கின்ற எரிபொருள் இருப்பு என்ன என்பதை அரசாங்கம் சமர்ப்பிக்குமா மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த நிலை எனில் ஈரான் கார்க் தீவு தாக்கப்பட்டால் என்ன செய்வது இதற்கு அரசாங்கம் ஏதாவது திட்டம் வைத்துள்ளதா என்று கேள்வியெழுப்பினார்.

Advertisement

Advertisement

Advertisement