• Apr 16 2026

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன? சர்வதேச போர் களத்தில் இலங்கை: சுரேன் ராகவன் அவசர எச்சரிக்கை

Aathira / Mar 6th 2026, 4:05 pm
image

சர்வதேச கடற்பரப்பில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை அறியாமலேயே ஒரு ஆபத்தான சர்வதேச போர் களத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகருமான சுரேன் ராகவன் கவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

அமெரிக்க தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் ஈரானிய போர்க்கப்பல்களில் ஒன்றை திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தியிருப்பது பாதுகாப்பு சவால்களை உருவாக்கக்கூடும் என கூறினார்.

அந்தக் கப்பல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி கோரியிருந்ததாகவும், ஏன் அது தாமதிக்கப்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பினார். பின்னர் மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்கப்பட்டதும் சந்தேகங்களை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், கப்பல் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் திருகோணமலை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தார்.

இந்த போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த வார தேயிலை ஏலத்தில் 25%க்கும் மேற்பட்ட தேயிலை விற்பனையாகாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற சர்வதேச நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி உடனடியாக அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்ட வேண்டும் எனவும் சுரேன் ராகவன் வலியுறுத்தினார்.

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன சர்வதேச போர் களத்தில் இலங்கை: சுரேன் ராகவன் அவசர எச்சரிக்கை சர்வதேச கடற்பரப்பில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கை அறியாமலேயே ஒரு ஆபத்தான சர்வதேச போர் களத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகருமான சுரேன் ராகவன் கவலை வெளியிட்டுள்ளார்.கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், அமெரிக்க தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் ஈரானிய போர்க்கப்பல்களில் ஒன்றை திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தியிருப்பது பாதுகாப்பு சவால்களை உருவாக்கக்கூடும் என கூறினார்.அந்தக் கப்பல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி கோரியிருந்ததாகவும், ஏன் அது தாமதிக்கப்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பினார். பின்னர் மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்கப்பட்டதும் சந்தேகங்களை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டார்.மேலும், கப்பல் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் திருகோணமலை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்தார்.இந்த போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த வார தேயிலை ஏலத்தில் 25%க்கும் மேற்பட்ட தேயிலை விற்பனையாகாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.இதுபோன்ற சர்வதேச நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி உடனடியாக அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்ட வேண்டும் எனவும் சுரேன் ராகவன் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement