• Oct 11 2024

விகாரைக்கு சென்று வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! தடியால் அடித்து கொலை - தலைமறைவான சகோதரனின் மகன்

Chithra / Jun 24th 2024, 11:21 am
image

Advertisement

 

காலி -  கோனபினுவல, சாமகம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் வசித்த 76 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் திருமணமாகாத நிலையில் தனது சகோதரனின் மகனுடன் பல வருடங்களாக இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பொசன் போய தினத்தன்று சில்  எடுத்து விட்டு வீடு திரும்பிய பெண் தடியால் அடித்து கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண் கொல்லப்பட்ட இடத்தில் அவரை அடித்ததாக சந்தேகிக்கப்படும் தடி ஒன்றும் பொலிஸ் விசாரணையின் போது அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.

அதன்படி, பொசன் போய (21) தினத்தன்று மாலை வேளையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பெண்ணின் சகோதரரின் மகனே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது சகோதரரின் மகன் அந்த பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கோனபினுவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விகாரைக்கு சென்று வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி தடியால் அடித்து கொலை - தலைமறைவான சகோதரனின் மகன்  காலி -  கோனபினுவல, சாமகம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த வீட்டில் வசித்த 76 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பெண் திருமணமாகாத நிலையில் தனது சகோதரனின் மகனுடன் பல வருடங்களாக இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.பொசன் போய தினத்தன்று சில்  எடுத்து விட்டு வீடு திரும்பிய பெண் தடியால் அடித்து கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பெண் கொல்லப்பட்ட இடத்தில் அவரை அடித்ததாக சந்தேகிக்கப்படும் தடி ஒன்றும் பொலிஸ் விசாரணையின் போது அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.அதன்படி, பொசன் போய (21) தினத்தன்று மாலை வேளையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.பெண்ணின் சகோதரரின் மகனே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.தற்போது சகோதரரின் மகன் அந்த பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கோனபினுவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement